• Latest News

    Nov 21, 2021

    வரவு - செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பதற்கு மக்கள் காங்கிரஸ் தீர்மானம்

    சஹாப்தீன் - 

    அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீடம் இன்று இரவு கொழும்பில் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது. கட்சியின் தலைவர் றிசாட் பதியூதீன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அரசாங்கத்தினால் முன் வைக்கப்பட்டுள்ள வரவு - செலவுத் திட்டம் குறித்தும் ஆராயப்பட்டது.

    இதன் போது அரசாங்கத்தின் வரவு - செலவு திட்டம் குறித்து உயர்பீட உறுப்பினர்கள் கருத்துக்களை முன் வைத்தனர். இதனைத் தொடர்ந்து வரவு - செலவுத் திட்டத்திற்கு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிராக வாக்களிக்க வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    இன்றைய உயர்பீடக் கூட்டத்திற்கு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான முஸரப், இஷாக் ரஹ்மான், அலிசப்ரி ஆகியோர்கள் சமூகமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

     கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் கட்சியின் தீர்மானத்திற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டுமென்றும், எவரும் வரவு - செலவுத் திட்ட வாக்கெடுப்பில் நடுநிலைமை கூட வகிக்க முடியாதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்சியின் கட்டுப்பாட்டை மீறிச் செயற்படுகின்றவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வரவு - செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பதற்கு மக்கள் காங்கிரஸ் தீர்மானம் Rating: 5 Reviewed By: The Murasu
    Scroll to Top