சஹாப்தீன் -
அம்பாறை மாவட்டத்தில் தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்தப்படவுள்ள பாடசாலைகளின் பெயர்ப்பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி நிந்தவூர் அல் - மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையும் தேசிய பாடசாலையாக தரம் உயர்த்தப்படவுள்ளது.
இதே வேளை, பாடசாலைகளின் விபரப்பட்டியலில் (Phase) கட்டம் - 01, (Phase) கட்டம் - 02 எனக் காணப்பட்டாலும், தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்தப்படவுள்ள அனைத்துப் பாடசாலைகளும் ஒரே நேரத்தில் தரம் உயர்த்தப்படவுள்ளதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் தெரிவித்தார்.தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்தப்படவுள்ள பாடசாலைகளை இரண்டு கட்டங்களாக பிரித்து வைத்துள்ளமை பற்றியும், பாடசாலைகள் எப்போது தரம் உயர்த்தப்படுமென்றும் வினவிய போதே மேற்கண்டவாறு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், குறிப்பிட்ட பட்டியலுள்ள சகல பாடசாலைகளும் எதிர்வரும் ஏப்ரல் இறுதிப் பகுதியில் தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்தப்படும். அதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment