• Latest News

    Aug 11, 2020

    நிந்தவூரில் இருவர் பிணையில் விடுதலை

    இப்னு செய்யத் -
    நிந்தவூரைச் சேர்ந்த எஸ்.ஏ என்று அழைக்கப்படும் முகம்மது காசிம் என்பரை காரினால் தாக்கி கொலை முயற்சி மேற்கொண்டமை என்ற குற்றச்சாட்டின் பேரில் நிந்தவூரைச் சேர்ந்த பைசால் காசிம் ஆசிப், அபூ அய்யாஸ் என்று அழைக்கப்படுகின்றவர்களை சந்தேகத்தின் பேரில் சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.
     
    கடந்த 05ஆம் திகதி அதிகாலை நிந்தவூர் பெரிய பள்ளிவாசல் முன்பாக வைத்தியசாலை வீதியால் மோட்டார் சைக்கிளிலில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் காரில் அவ்வழியால் வந்து கொண்டிருந்த மேற்படி சந்தேக நபர்கள் காரினால் தாக்கியதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து சந்தேக நபர்களில் ஒருவரான அபூ அய்யாஸ் என்று அழைக்கப்படுகின்றவரை நேற்று (10.08.2020) பொலிஸார் கைது செய்தனர். மற்றைய சந்தேக நபராகிய ஆசிப் இன்று பொலிஸில் சரணடைந்தார்.

    இவர்களை விசாரணை செய்த சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் இன்று (11.08.2020) இருவரையும் தலா ஒரு இலட்சம் ரொக்கப்பணத்திலும், தலா 04 சரிரப் பிணையிலும் விடுதலை செய்துள்ளது. இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணை எதிர்வரும் 2020.10.13ஆம் திகதி சம்மாந்துறை நீதிமன்றத்தில் நடைபெற இருக்கின்றது. ஆசிப் என்று  அழைக்கப்படுகின்றவர் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிமின் மகனாவார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நிந்தவூரில் இருவர் பிணையில் விடுதலை Rating: 5 Reviewed By: The Murasu
    Scroll to Top