• Latest News

    Jul 23, 2020

    சம்பிக்கவை முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவு

    2016ஆம் ஆண்டு கொழும்பின் புறநகர் ராஜகிரியவில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் முன்னிலையாகுமாறு முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    எதிர்வரும் ஒக்டோபர் 21ஆம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

    ஒருவர் காயமடைந்த இந்த விபத்தின் போது சம்பிக்க ரணவக்கவின் சாரதியே வாகனத்தை செலுத்திசென்றதாக முன்னதாக தெரிவிக்கப்பபட்டிருந்தது.

    எனினும் பின்னர் குறித்த சாரதியிடம் பெறப்பட்ட இரகசிய வாக்குமூலத்தின் அடிப்படையில் சம்பிக்க ரணவக்க மீது சட்டமா அதிபர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சம்பிக்கவை முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவு Rating: 5 Reviewed By: The Murasu
    Scroll to Top