• Latest News

    Jul 21, 2020

    சலுகைகளை வழங்கி சம்பந்தனை ஒருபோதும் சமாளிக்க முடியாது!

    சலுகைகளை வழங்கி சம்பந்தனைச் சமாளிக்கலாம் என்று மஹிந்த ராஜபக்சவோ அல்லது ரணில் விக்கிரமசிங்கவோ நினைக்கக்கூடாது. சலுகைகளை வழங்கி சம்பந்தனை ஒருபோதும் சமாளிக்கவே முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
    அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

    அரசிடமிருந்து சலுகைகளைப் பெறுவதற்காக எமது கொள்கைகளை விட்டுக் கொடுக்கமாட்டோம்; உரிமைகளை விட்டுக் கொடுக்கமாட்டோம். இதை வலியுறுத்திச் சொல்ல வேண்டியது எமது கடமை. நாங்கள் இதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.

    சலுகைகளை வழங்கி சம்பந்தனைச் சமாளிக்கலாம் என்று மஹிந்த ராஜபக்சவோ அல்லது ரணில் விக்கிரமசிங்கவோ நினைக்கக்கூடாது. 

    சலுகைகளை வழங்கி சம்பந்தனை ஒருபோதும் சமாளிக்கவே முடியாது. சம்பந்தனைச் சமாளிப்பதாக இருந்தால் சம்பந்தனுடைய மக்களுக்குக் கொடுக்க வேண்டிய உரிமைகளை வழங்க வேண்டும்.

    அவற்றைக் கொடுத்தால்தான் சம்பந்தனை அவர்களால் சமாதானப்படுத்த முடியும்; சமாளிக்க முடியும். இதுதான் உண்மையான நிலைமை. இதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சலுகைகளை வழங்கி சம்பந்தனை ஒருபோதும் சமாளிக்க முடியாது! Rating: 5 Reviewed By: The Murasu
    Scroll to Top