• Latest News

  Jul 12, 2020

  அன்பிற்கும் மரியாதைக்குமுரிய உறவுகளே.. உங்களுடன் ஒரு சில நிமிடங்கள்...(விளம்பரம்)

  அன்பிற்கும் மரியாதைக்குமுரிய உறவுகளே..
  எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தபால் வாக்காளர்களாக வாக்களிக்க வாய்ப்புப் பெற்றிருக்கும் உங்களுடன் ஒரு சில நிமிடங்கள்...

  மூன்று தடவைகள் மக்களினால் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட அல்லாஹ்வின் நாட்டம் எனக்கமைந்திருந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

  தசாப்தங்களுக்கும் மேலாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பல அமைச்சுப் பதவிகளை வகித்தவர்களை, அவர்களது செயற்பாடுகள் காரணமாக மக்கள் நிராகரிக்க காத்திருக்கும் இன்றைய கள நிலவரத்தில் பிரதேச மட்ட தேர்தல்களில் மக்களின் வாக்குகளால் மூன்று தடவைகள் முதன்மையானவனாக தெரிவு செய்யப்பட்ட எனக்கான மக்களின் மகோன்னத ஆதரவு என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்.

  பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நமது பிரதிநிதி ஒருவருக்கு இருக்கவேண்டிய அரசியல் துணிவு, நேர்மை, மக்கள் தொடர்பாடல், ஆளுமை என்பவற்றை எனது நடவடிக்கைகள் மூலம் கடந்தகாலங்களில் நான் நிரூபித்துள்ளேன் என நம்புகிறேன்.. அல்ஹம்துலில்லாஹ்.

  முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் அல்லாது நிந்தவூரில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற முடியாது என்றும், அக்கட்சியின் தலைவரின் அனுக்கிரகமின்றி, இருக்கும் தவிசாளர் பதவியினைக் கூட தக்கவைத்துக்கொள்ள முடியாது என்றுமிருந்த அரசியல் கள நிலவரத்தில், அத்தலைவர் நமது சமூகத்தின் சாபக்கேடு என்பதனை அறிந்து கொண்ட பின்னர் எனது அரசியல் பதவிகளை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் சமூகத்திற்கெதிரான அத்தலைமையுடன் எவ்வித சமரசத்திற்கும் நாம் இணங்கிச் செல்லவுமில்லை; அவரின் எந்தப்பேரம் பேசலுக்கும் சோரம் போகவுமில்லை... அல்ஹம்துலில்லாஹ்.

  எனது அரசியல் எதிர்காலத்தினைப் பற்றி சற்றும் சிந்திக்காமல் சமூகத்தை அடகு வைக்கும் அரசியலை எதிர்த்து நிற்கும் அரசியல் தைரியத்தினை எனக்கு தந்த இறைவனுக்கே புகழ் அனைத்தும்.. அல்ஹம்துலில்லாஹ்.

  ஊரூராக பிரிந்து கிடந்த, மேட்டுக்குடி அரசியலுக்குள் அடிமையாகிக் கிடந்த, பேரின சமூகத்தின் ஏவலாளிகளாகிக் கிடந்த நம்மவர்களின் அடிமை அரசியலை தகர்த்தெறிந்து சமூகமாக நம்மை ஒற்றுமைப்படுத்திய நமது பெருந்தலைவர் மறைந்த மாமனிதர் அஸ்ரப் அவர்களின் வழிகாட்டுதல்களை புறந்தள்ளி மீளவும் அதே பிரதேசவாத அரசியலை, மேட்டுக்குடி அரசியலை, அடிமை அரசியலை முன்கொண்டுவரும் இழிநிலை இன்று நமது அரசியல் அரங்கில் கோலோச்ச முனைவது மிகவும் ஆபத்தானதாகும்.

  எதைச் செய்தாவது பாராளுமன்ற பிரதிநிதியாகும் நோக்கில் பிரேதச வாதத் தீயிட்டு நமது சமூகத்தின் ஒற்றுமையை குலைத்த அதாஉல்லாஹ், ஹிஸ்புலலாஹ் போன்றவர்களை சரிகண்டு, ஊருக்கொரு எம்.பி வேண்டும் என்று பிரச்சாரங்களை மேற்கொண்டவாறே சமூக அரசியல் செய்வதாக பிதற்றும் வேட்பாளர்களுக்கு மத்தியில், எனது பாராளுமன்ற பிரவேசமானது நிந்தவூருக்கானது மாத்திரமானதல்ல என்பதனையும் நான் ஊருக்கு மாத்திரமான எம்.பி அல்ல என்பதனையும் வெளிப்படுத்துவதோடு, மாவட்டம் முழுவதற்குமானவனாக செயற்படுவேன் எனவும் உறுதியளிக்கிறேன்.

  இதனடிப்படையில், கோசங்களுக்கு பின்னால் அள்ளுண்டு போகாமல், அறிவார்த்தமாக சிந்தித்து வாக்களிக்கும் தகைமையுடைய கற்றறிந்த தங்களின் ஆதரவு எனக்கு கிடைக்கும் என்ற திடமான நம்பிக்கை எனக்கிருக்கிறது. இன்ஷா அழ்ழாஹ்.

  நீங்கள் ஒவ்வொருவரும் தங்களின் வாக்கிற்கு மாத்திரமானவர்களல்ல. தங்களைச் சார்ந்த குடும்பத்தவர்களிலும் செல்வாக்கு செலுத்துபவர்கள் என்ற அடிப்படையில், எமது சமூகத்திற்கெதிரான அனைத்து செயற்பாடுகளிலும் அரசியல் துணிவோடு செயற்படுகின்ற நமது தலைமை றிஸாட் பதியுதீன் அவர்களின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மயில் சின்னத்திற்கும் தங்களின் பிரதேசத்தில் போட்டியிடும் எமது பட்டியலில் உள்ள தகுதியான நமது வேட்பாளரின் இலக்கத்திற்கும் எனது இலக்கமான 5 ஆம் இலக்கத்திற்கும் வாக்களிக்குமாறு தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
  எனது வெற்றி நமக்கானதாகும்... இன்ஷா அல்லாஹ்...

  இவ்வண்ணம்,

  உங்களுக்காக உங்களில் ஒருவன்,
  அஷ்ரப் தாஹிர்,
  புதிய மாற்றம்
  சமூகத்திற்கான முன்னேற்றம்
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Post a Comment

  Item Reviewed: அன்பிற்கும் மரியாதைக்குமுரிய உறவுகளே.. உங்களுடன் ஒரு சில நிமிடங்கள்...(விளம்பரம்) Rating: 5 Reviewed By: The Murasu
  Scroll to Top