• Latest News

    Jul 22, 2020

    பாலித தெவரப்பெரும மீது கொடூர தாக்குதல்! வைத்தியசாலையில் அனுமதி

    முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளருமான பாலித தெவரப்பெரும மீது சிலர் மிக கொடூரமான முறையில் தாக்கியுள்ளதாக மத்துகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

    மத்துகம வேகந்தல பிரதேசத்தில் குடிநீர் குழாய் கட்டமைப்பு தொடர்பில் சோதனையிடுவதற்காக பாலித சென்ற சந்தர்ப்பத்தில் ஒப்பந்த நிறுவன அதிகாரிகளுடன் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதன்போது தாக்குதலுக்குள்ளான முன்னாள் அமைச்சர் அருகில் உள்ள குழாய்க்குள் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

    இதனால் காலில் படுகாயம் ஏற்பட்ட நிலையில் பாலித வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதற்கு முன்னரும் முன்னாள் அமைச்சர் அவ்விடத்திற்கு சென்று வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    தற்போது அவர் களுத்துறை, நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சத்திர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பாலித தெவரப்பெரும மீது கொடூர தாக்குதல்! வைத்தியசாலையில் அனுமதி Rating: 5 Reviewed By: The Murasu
    Scroll to Top