• Latest News

    Jul 17, 2020

    நிந்தவூரில் கொரேனா தொற்று: கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளரே உங்களின் கவனத்திற்கு...

    இதனை தவிர்க்கும் விதமாக குறிப்பாக நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரியினால் மக்களுக்கென அறிவிக்க பள்ளிவாசல்களுக்கு விநியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரத்தில் இரு கொரோனா நோயாளிகள் நிந்தவூர் பகுதியில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக அச்சிடப்பட்டிருந்தது.

    எனினும் அதில் எவ்வித உண்மையும் கிடையாது. அவ்விடயம் மக்களினை விழிப்படைய செய்வதற்காகவே மேற்கொள்ளப்பட்டிருந்தது. 

    கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிமனையின் பணிப்பாளர் ஜி.சுகுணன் அவர்களே.. 

    இச்செய்தி வதந்தி என்று நீங்கள் சொல்லியுள்ளீர்கள். 

    அதே வேளை,  வதந்தி பரப்புவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளீர்கள். 

    அவ்வாறாயின் இத்துண்டுப் பிரசுரத்தில்  உள்ளதைச் சொல்லும் பொது மக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போகின்றீர்களா அல்லது துண்டுப் பிரசுரத்தை வெளியிட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போகின்றீர்களா? 

    பொது மக்களை பொறுத்த வரை பொறுப்பு வாய்ந்தவர்களினால் துண்டுப் பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது. அவர்களின் ஒப்பமும் உள்ளது. ஆகவே, பொது மக்களிம் மன்னிப்பு கேட்க வேண்டியது சுகாதாரத்துறை அலுவலகம். இன்றைய மன்னிப்பு நாளைய உண்மையை ஏற்றுக் கொள்ளச் செய்யும். இதனை பொது மக்களோடு முடிச்சுப் போட்டுக் கொண்டால் உண்மையையும் பொய் என்றாகிவிடும். கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளரே உங்களின் கவனத்திற்கு...

    மக்களை விளிப்படையச் செய்வதற்காக பொய்யான கருத்துக்களை பரப்புரை செய்ய முடியாது. மக்களை பீதிக்குள்ளாக்கி கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது. பொது மக்களுக்கு உண்மையைச் சொல்லுதல் வேண்டும். அரசியல்வாதிகள் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக பொய்களைக் கூறுகின்றார்கள். அது போன்று சுகாதாரத்துறையினர் பொய்களை சொல்லி மக்களின் சுகாதாரத்தை பேண முடியாது. அவ்வாறு பொய்களை சொல்லும் போது உண்மைக்கு பெறுமதியில்லாது போய்விடும். அத்தோடு சுகாதாரத்துறையில் பொது மக்கள் நம்பிக்கை இழந்துவிடுவர். அவர்கள் பொய் சொல்லுகின்றவர்கள் என்றாகிவிடும்.

    சுகாதாரத்தை பேண வேண்டுமென்று பொது மக்களையும், வியாபார நிலையங்களையும் அச்சுறுத்தி பணிய வைக்கும் நடவடிக்கைளை மேற்கொண்டு வரும் பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் பொது மக்களை விளிப்படைச் செய்வதற்கும் அதே வழிமுறையை கையாண்டுள்ளமை கண்டிக்கத்தக்கது.
    Siraj -
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நிந்தவூரில் கொரேனா தொற்று: கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளரே உங்களின் கவனத்திற்கு... Rating: 5 Reviewed By: The Murasu
    Scroll to Top