• Latest News

    Jul 21, 2020

    ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது. பௌத்த மதத்துக்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது.

    ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பௌத்த மதத்துக்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது.

    ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் மத்தியில் இன்று தமது கட்சி விஞ்ஞானத்தை கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச வெளியிட்டார்.

    இதன்போது உரையாற்றிய சஜித் பிரேமதாச, தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் யோசனைகளை நடைமுறைப்படுத்த கால நிர்ணயத்தை வரையறுத்துள்ளதாக குறிப்பிட்டார்.

    தமது கட்சி ஆட்சிக்கு வந்தால் அமெரிக்காவின் எம்சீசீ உடன்படிக்கையில் கைச்சாத்திடாது என்றும் அவர் தெரிவித்தார்.

    ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பௌத்தத்துக்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய மதங்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படுகிறது.

    கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது பௌத்த தேரர்களுக்கு எதிராக கருத்துக் கூறியமைக்காக சஜித் பிரேமதாச, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் மத்தியிலேயே விமர்சனத்துக்கு உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வீடமைப்பு மற்றும் பொருளாதாரத்துக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது. பௌத்த மதத்துக்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. Rating: 5 Reviewed By: The Murasu
    Scroll to Top