• Latest News

  Jul 12, 2020

  தபால்மூல வாக்காளர்களே! கல்விமான்களே! புத்திஜீவிகளே! அரச உத்தியோகத்தர்களே! உங்கள் ஒவ்வொருவரையும் நன்றியோடு வரவேற்று அன்புரைக்கின்றேன்...(விளம்பரம்)

  தபால்மூல வாக்காளர்களே!
  கல்விமான்களே! புத்திஜீவிகளே! அரச உத்தியோகத்தர்களே!
  உங்கள் ஒவ்வொருவரையும் நன்றியோடு வரவேற்று அன்புரைக்கின்றேன்...
   
  அஸ்ஸலாமு அலைக்கும்
  மதிப்புக்குரியவர்களே! தபால்மூல வாக்களிப்புக்கான எனது விளக்க மடலை உங்கள் கரம் கிடைக்க அனுப்பியிருந்தேன் அதன் செய்திகளையும் கருத்துக்களையும் நீங்கள் படித்து அறிந்திருப்பீர்கள் என்று நம்புகின்றேன். இருந்தபோதிலும் அதற்கு மேலாக இச்சிறுபதிவினையும் உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சிகொள்கின்றேன்.

  எதிர்வரும் 2020.08.05ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய மக்கள் சக்தியின்; வேட்பாளராக உங்கள் முன் நிற்பதற்கு இறைவன் மீண்டும் எனக்கு ஒரு சந்தர்ப்பத்தினை அளித்துள்ளான் - அல்ஹம்துலில்லாஹ்.

  இன்று எமது சமூகம் எதிர்நோக்கியுள்ள பேரினவாத நெருக்கடிகளுக்கும் சவால்களுக்கும் வழிகாட்டுவதும் சிந்தனைரீதியான கருத்துக்களை மற்றவர்களுக்கு எடுத்துக்கூறுவதும் கற்றவர்கள் கொண்டுள்ள சமூகப் பொறுப்பாகும் என நான் நம்புகிறேன்.

  இதற்கு முன்னுதாரணமாக தபால்மூல வாக்களிப்பில் தூரநோக்கோடு சிந்தித்து நீங்கள் ஒவ்வொருவரும் செயலாற்றிக்காட்ட வேண்டும் என்பது எனது விருப்பாக இருக்கிறது.

  இன்று தேசிய அரசியலில் தலைவிரித்தாடும் இனவாதமும் அதற்குச் சாதகமாக இயங்கும் அரசாங்கமும் முஸ்லிம் சமூகத்தின் மீது குறிவைத்து பல அடக்குமுறைகளையும் வன்முறைகளையும் மேற்கொண்டுவருகின்றது.

  மேலும் இன்று தொல்பொருள் ஆய்வு என்ற அடிப்படையில் பொளத்த நிலங்களை விரிவுபடுத்தும் அரசின் நில ஆக்கிரமிப்பு சதித்திட்டத்திற்குள் இன்று அம்பாறை மாவட்டத்தில் இறக்காமம், பொத்துவில் என்று தொடங்கி அது இன்னும் வடகிழக்கு முழுவதும் நீண்டுசெல்வதற்கான அபாய அறிவிப்பை அரசாங்கம் செய்துவிட்டது.

  எனவே, இவற்றுக்கெல்லாம் ஒரு தீர்வாக, நாம் அடைய விரும்பும் அம்பாறை மாவட்டத்தின் அரசியல் அதிகாரம் என்பது, அதிகார அத்துமீறலையும் கட்டவிழ்த்துவிடப்படும் அடக்குமுறைகளையும் எதிர்த்து வெற்றிகொள்வதற்குத் தேவையான ஒரு பலமாகும். அதாவது அதிகார அடக்குமுறையிலிருந்து எமது சமூகத்தை பாதுகாக்கின்ற முயற்சியுமாகும். இதற்கு எமது முஸ்லிம் சமூகம் இத்தேர்தல் மூலம் மாவட்டத்தை வெற்றிகொள்வதே சிறந்த ஒரு வழியாகும்.

  ஆகவேதான், இந்த பேரினவாத பிடிக்குள்ளிருந்து எமது சமூகத்தையும் சமூக இருப்பையும் காப்பாற்றுவதற்கும் அதை எதிர்த்துப் போராடுவதற்கும் அதிகபட்ச பாராளுமன்ற பிரதிநிதிகளை வென்றெடுக்கக்கூடிய தேவை இன்று அம்பாறை மாவட்டத்திற்குள் எழுந்துள்ளது. அதற்கு மிகச் சாத்தியமான வழி எமது தொலைபேசிச் சின்னத்திற்கு வாக்கிளிப்பதே ஆகும்.

  இதில் கடந்தகாலங்களில் மக்களுக்காக பணியாற்றுகின்ற ஒரு பாராளுமன்ற உறுப்பினராக நான் உங்களில் ஒருவனாக செயற்பட்டிருப்பதை நீங்கள் ஒவ்வொருவரும் நன்கு அறிவீர்கள். அபிவிருத்தி என்ற பார்வையிலும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பிலும் என்மீது நீங்கள் கருத்து வேறுபாடு கொண்டாலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கொள்கை மாறாத தொண்டனாகவும் அக்கட்சியின் இலக்கை சுமந்து நிற்கின்ற காவலனாகவும் நான் இன்னும் இருந்துவருவதை நீங்கள் நம்புவீர்கள்.

  இனவாதம் தீவிரமடைந்த உச்ச நிலையில் அதை எதிர்த்து பாராளுமன்றத்திலும் அம்பாறை மாவட்ட செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டங்களிலும் எமது சமூகத்தைவிட்டுக்கொடுக்காத விவாதங்களையும் உரிமைக் குரல்களையும் நான் உரக்க உரைத்திருக்கின்றேன் என்ற திருப்தி எனக்கு இருக்கின்றது.

  அத்தகைய அனுபவமும் சமூகத்திற்காக துணிந்து குரல் கொடுக்கும் ஆர்வமும் கொண்டுள்ள நான், அதே பாதையில் எனது மக்கள் பணியைத் தொடர்வதற்கான அரசியல் அங்கீகாரத்தினை கற்ற சமூகத்திடம் எதிர்பார்த்து நிற்கின்றேன். அதனடிப்படையில் தொலைபேசிச் சின்னத்திற்கும், தங்களின் தெரிவு வாக்குகளில் ஒன்றை எனது 6 ஆம் இலக்கத்திற்கும் அளித்து, எனக்கான வெற்றியின் பாதையில் கைகோர்த்து வருமாறு தங்களை பேரன்புடன் அழைக்கின்றேன்.
  நன்றி.
  வஸ்ஸலாம்
  எம்.ஐ.எம். மன்சூர்
  வேட்பாளர்,
  ஐக்கிய மக்கள் சக்தி,
  திகாமடுல்ல மாவட்டம்
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Post a Comment

  Item Reviewed: தபால்மூல வாக்காளர்களே! கல்விமான்களே! புத்திஜீவிகளே! அரச உத்தியோகத்தர்களே! உங்கள் ஒவ்வொருவரையும் நன்றியோடு வரவேற்று அன்புரைக்கின்றேன்...(விளம்பரம்) Rating: 5 Reviewed By: The Murasu
  Scroll to Top