• Latest News

  Jun 30, 2020

  அம்பாறையில் முஸ்லிம் அரசியல்வாதிகளால் பல பிரச்சினைகள்

  பாறுக் ஷிஹான் -
  தமிழர்களை பொறுத்தளவில் ஒழுக்க நெறியில் வளர்ந்தவர்கள் அதன்படிதான்  இருக்கின்றோம் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார் .
  திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் தவராசா கலையரசன் பெரியநீலாவணை தொடர்மாடி குடியிருப்பு மக்களை  இன்று -30- சந்தித்த பின்னர் தேர்தல் பிரச்சார உரையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
  மேலும் தனது உரையில்
  தமிழர்களைப் பொறுத்தளவில் ஒழுக்க நெறியில் வளர்ந்தவர்கள் அதன்படி  இருக்கின்றோம் நாங்களும் அந்த கட்டமைப்புக்குள் உருவாக்கப்பட்டவர்கள். இன்று அந்த வழி எல்லாம் திசைமாறி எம்மை சின்னாபின்னமாகி இருப்புக்களை எல்லாம் இல்லாமல் செய்வதற்காக பல சதி வேலைகளை எமக்கு மக்கள் மீது திணிக்கப்பட்டிருக்கிறது .கட்டமைப்புள்ள சமூகமாக நாம் மாற்றியமைக்க வேண்டும்
  வடகிழக்கு பிரதேசங்களில் பல கட்சிகளை  சுயேட்சை குழுக்களை களமிறக்கி இருக்கிறார்கள் . இந்த அரசாங்கம் தமிழர்களுக்கு அனைத்தயும் செய்தது போலவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேண்டாம் என கூறியது போலவும் பல பொய்யான பிரச்சாரங்களை செய்துகொண்டு இருக்கிறார்கள்.
  அவர்களுக்கு தெரியும் வட கிழக்கிலே மிகவும் பலம் பொருந்திய தமிழர்களை எவ்வாறு சின்னாபின்னமாக்கலாம் என்று  அம்பாறை மாவட்டத்திலே பல போலியான பிரச்சாரங்களை மேற்கொண்டு எம்மைச் சுற்றி திரிகின்றார்கள் எங்களை வசைபாடி இல்லாமல் செய்வதற்கு பல வழிகளைச் செய்கிறார்கள்.
  நாங்கள் எங்களுடைய அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தளவில் ஒரே ஒரு தமிழ்ப் பிரதிநிதி பெறக்கூடிய சூழ்நிலை தான் இருக்கிறது அவ்வாறு அதை நாங்கள் பெறவில்லை என்றால் இந்த மாவட்டத்தில் நாங்கள் அனாதை ஆக்கப்படுவோம் . எம்மை நோக்கி வருகின்றன அநீதிகளை தட்டி கேட்கின்ற சூழ்நிலை ஏற்படாது போகும். அதற்காக அணிதிரள வேண்டும். 
  தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மீது வைக்கும் விமர்சனங்களை நாங்கள் தாங்குபவர்களாகவும்  அதே போல் தமிழ் மக்களின் பிரச்சினைகளை  தீர்ப்பவர்களாகவும்  நாங்கள் தான் இருக்கின்றோம்.எனவே தயவு செய்து அனைவரும் வீட்டுக்கு வாக்களித்து எமது பிரதிநிதுத்துவத்தை பாதுகாக்க வேண்டும்.
  அம்பாறை மாவட்டத்திலே பல பிரச்சினைகள் உள்ளது அவற்றைத் மாற்று கட்சிகள தீர்த்து கொடுத்தால் மௌனமாக இருந்திருப்போம் ஆனால் இந்தத் தடவை அல்ல இதற்கு முன்பும் கூட பல ஆர்ப்பாட்டங்கள் நடந்தேறி இருந்ததை அவர்கள் தமக்கு   சாதகமாக்கிக் கொண்டார்கள்.கடந்த காலங்களில் செய்திகளில்  ஐக்கிய நாடுகள் சபைக்கு எதிராக தமிழர்கள் செயல்படுகிறார்கள் என்ற எண்ணப் பாடுகளை தோற்றுவித்தார்கள். அவ்வாறு இந்த மக்களையும் பயன்படுத்தியது இந்த அரசு ஆனால் எதுவுமே செய்யவில்லை.
  மக்களையும் எங்களையும் ஏமாற்றுகின்ற விடயத்தை  பெரும்பான்மை அரசியல் தலைவர்கள் அன்றிலிருந்து இன்றுவரை மேற்கொண்டுதான் இருக்கிறார்கள் உண்மையிலே எங்கள் மாவட்டத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகளால் பல பிரச்சினைகள் நடந்து இருக்கின்றது. தற்காலத்தில் அது தவிர்க்கப்பட்டு இருக்கின்றது. 
  நாங்கள் எமது மக்களை அணிதிரட்டி ஜனநாயக ரீதியில் எங்களைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய நடைமுறைகளை செயல்படுத்த வேண்டியவர்களாக இருக்கின்றோம். எங்களை நாங்களே பாதுகாத்துக் கொள்ளக்கூடிய செயற்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சில பிழையான வழியில் செல்லும் இளைஞர்களை பெரியோர்கள் அறிவுரைகளை கூறி நம்மை பாதுகாத்துக் கொள்ள கூடிய வழிமுறைகளை அவர்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும். பிழையான வழியில் செல்வதால் எதிர்காலத்தில் நிலையான தீர்வை பெறுமா என்ற கேள்விகளைக் கேளுங்கள் என்றார்.
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Post a Comment

  Item Reviewed: அம்பாறையில் முஸ்லிம் அரசியல்வாதிகளால் பல பிரச்சினைகள் Rating: 5 Reviewed By: The Murasu
  Scroll to Top