728x90 AdSpace

  • Latest News

    May 18, 2020

    மிகப் பாரிய சூறாவளியாக வலுவடையக்கூடிய சாத்தியம்! மக்களிக்கு முக்கிய அறிவுறுத்தல்

    அம்பன் சூறாவளி வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

    “AMPHAN” (உச்சரிப்பு UM-PUN) என்ற பாரிய சூறாவளியானது பாரிய சூறாவளியாக விருத்தியடைந்து இன்று (2020 மே 18ஆம் திகதி) அதிகாலை 02.30 மணிக்கு மணிக்கு திருகோணமலைக்கு வடகிழக்காக ஏறத்தாழ 740 கி.மீ தூரத்தில் வட அகலாங்கு 12.90 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 86.90 E இற்கும் இடையில் தென்வங்காள விரிகுடா மத்திய பகுதி கடற்பரப்புகளுக்கும்அண்மையாகவுள்ள கடற்பரப்புகளுக்கும் மேலாக மையம் கொண்டுள்ளது.

    இது அடுத்த 06 மணித்தியாலங்களில் ஒரு மிக மிகப் பாரிய சூறாவளியாக வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

    இது மே 20ஆம் திகதியளவில் வடக்கு - வடகிழக்கு திசையில் மேற்கு வங்காள கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

    இத் தொகுதியின் தாக்கம் காரணமாக நாடு முழுவதும், குறிப்பாக நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை தொடர்ந்து நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

    சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாடு முழுவதும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

    நாடு முழுவதும் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தென், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அடுத்த 12 மணித்தியாலங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

    வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

    இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

    நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை காணப்படும். காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

    கடல் நிலை: நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் கொந்தளிப்பாகவும் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

    இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது (மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரையும்) பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்கொந்தளிப்பாகவும்காணப்படும்.

    கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மிகப் பாரிய சூறாவளியாக வலுவடையக்கூடிய சாத்தியம்! மக்களிக்கு முக்கிய அறிவுறுத்தல் Rating: 5 Reviewed By: The Murasu
    Scroll to Top