• Latest News

    May 28, 2020

    கிண்ணியா - கொழும்பு பஸ் சேவை ஆரம்பம்

    கிண்ணியா முதல் கொழும்பு வரையான 49ஆம் இலக்க இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து நாளை முதல் சேவையில் ஈடுபடவுள்ளது.

    இந்த விடயத்தை கிண்ணியா சாலையின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

    குறித்த பேருந்தானது நாளை காலை 6 மணிக்கு கிண்ணியாவில் இருந்து நிட்டம்புவ வரை சேவையில் தொடர்ந்தும் பொது மக்களின் தேவை கருதி ஈடுபடவுள்ளது.

    கொவிட் - 19 ஒழிப்பு தொடர்பிலும் அதிலிருந்து பாதுகாப்பு பெறவும் குறித்த பேருந்து சேவை உரிய சமூக இடைவெளி, சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கிண்ணியா - கொழும்பு பஸ் சேவை ஆரம்பம் Rating: 5 Reviewed By: The Murasu
    Scroll to Top