• Latest News

  Apr 27, 2020

  இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள், நாம் செய்ய வேண்டியது என்ன..?

  அரபு நாட்டு பிரமுகரான டாக்டர் அப்துல்லாஹ் அல்ஜூயைத் என்பவர் இந்திய முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் குறித்து தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். பல்வேறு தரப்பின் கவனத்திற்கும் கொண்டு சென்று ஆக்கபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்.  இது குறித்து அவர் எழுதிய ஆக்கம் தமிழில் மொழிபெயர்த்து வழங்கப்பட்டுள்ளது. தமிழாக்கம் :  உணர்வு நாளிதழ். 27/4/2020
  இந்தியாவில் உள்ள நமது இஸ்லாமிய சகோதரர்கள் மனித குலத்திற்கே எதிரான மிகக் கொடூர குற்றங்களை எதிர்கொள்கிறார்கள்.
  முஸ்லிம்கள் மீதான வரம்பு மீறல்கள், உயிர்பலிகள் யாவும் அவர்கள் முஸ்லிம்கள் என்பதாலேயே தொடர்கின்றன.
  முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுக்கள் இந்தியாவில் வலுப்பெறுகின்றன. இது அங்குள்ள ஆட்சியாளர்கள் மற்றும் மதப்பற்றாளர்களின் பேச்சுகளில் தெளிவாக வெளிப்படுகிறது.
  இந்தியாவை ஓர் இந்து நாடாக மாற்ற இந்திய அரசு விரும்புகிறது.
  இந்து தேசியவாதத்தை முன்னிறுத்தியும் தேசத்தில் உள்ள பிற மக்களை ஒதுக்கியும் குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை தூண்டுவதன் மூலம் இந்த நோக்கத்தை நிறைவேற்ற அரசு முயற்சிக்கிறது.
  முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஜம்மு – காஷ்மீர் அனுபவித்து வந்த தன்னாட்சியை இந்திய அரசு ரத்து செய்தது. இத்தனைக்கும் அங்கே முஸ்லிம்களே அதிகம்.
  இந்திய முஸ்லிம்கள் தங்களை சொந்த நாட்டு மக்களை போல நடத்துங்கள் என்று கேட்டு வரும் வேளையில் இந்திய அரசோ அவர்களை இரண்டாந்தர குடிமக்களாக மாற்ற முயற்சிக்கிறது.
  டெல்லியில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலில் 37 பேர் கொல்லப்பட்டனர். இதில் முஸ்லிம்களே அதிகம். நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் காயமடைந்தனர்.
  வரம்பு மீறிய அந்த கும்பல் பெண்கள், குழந்தைகள், வயோதிகர்கள் என்று கூட இரக்கம் காட்டவில்லை. இந்த தாக்குதலில் 80 வயதை கடந்த பெண்மணியும் கொல்லப்பட்டுள்ளார்.
  காவல்துறையும் இந்துத்துவ கும்பலுக்கு பெரும் ஒத்துழைப்பை வழங்கினார்கள். முஸ்லிம்களுக்கு எதிரான இத்தாக்குதலை தடுக்க எவ்வித முயற்சியும் அவர்கள் எடுக்கவில்லை.
  இந்த தாக்குதலில் முஸ்லிம்களுக்கு சொந்தமான கட்டிடங்கள், மசூதிகள், விபாயார தளங்கள் என எதுவும் தப்பிக்கவில்லை.
  இந்துத்துவக்கும்பல் அவற்றை தாக்கி தீவைத்து அழித்து நாசமாக்கின. முஸ்லிம்களுக்கு சொந்தமான பொருள்களை சூறையாடினார்கள்.
  இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலில் பல மசூதிகள் தகர்க்கப்பட்டுள்ளன. பல மசூதிகளை எரித்து தங்கள் கொடிகளை நட்டியுள்ளனர்.
  குடியுரிமை சட்டத்தை எதிர்த்து இந்தியாவில் முஸ்லிம்கள் அமைதிவழியில் போராடிவரும் வேளையில் இத்தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. குடியுரிமை சட்டம் இனரீதியானது.
  இந்துத்துவ கும்பலால் முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல்கள் நடைபெறுவது இது முதல்முறையல்ல. இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான இத்தகைய மீறல்கள் அதிகம் நிகழ்ந்துள்ளது.
  இந்துத்துவ கும்பலுக்கு உள்ள அரசியல் அதிகார பாதுகாப்பு சிறுபான்மையின முஸ்லிம்களுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
  எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் நாட்டில் வன்முறை நிகழ்வுகள் நடைபெறும் முன் இதை அடையாளம் காண்பது அவசியம்.
  இந்தியாவில் முஸ்லிம்களுக்கு இருக்கும் இப்பிரச்சனையில் நமது கடமை என்னவென்றால் அங்கு அவர்கள் சந்திக்கும் மிருகத்தனமான தாக்குதல்களை, வேதனைகளை இஸ்லாமிய உலகுக்கு எடுத்துச் செல்வதாகும். இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் நலனை மேம்படுத்துவதில் இந்திய அரசு முனைப்பு காட்டுமளவு சர்வதேச மன்றங்களில் பங்கேற்று எடுத்து சொல்வதாகும்.
  இந்திய தயாரிப்புகளை புறக்கணிக்க பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். உலகம் முழுக்க உள்ள இந்திய தூதரங்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
  முஸ்லிம்களின் மீதான வன்முறையை தடுக்க இந்த நடவடிக்கை உதவும்.
  பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு உதவுவது சக முஸ்லிம்களின் மீதுள்ள மிக முக்கிய கடமையாகும். எனவே இந்திய முஸ்லிம்களுக்கு அவர்கள் சந்தித்து வரும் துன்பங்களை எதிர்கொள்ள எல்லா வகையிலும் உதவுவது அவசியமானதாகும்.
  மேலும் இந்திய முஸ்லிம்களுக்காக அல்லாஹ் அவர்களின் துன்பத்தை போக்குமாறு எல்லா தொழுகைகளிலும் பிரார்த்திக்க வேண்டும். இந்திய அரசு அவர்களிடமிருந்து பறித்துக் கொண்ட உரிமைகளை மீண்டும் அவர்களுக்கே வழங்கிடவும் பிரார்த்திக்க வேண்டும்.
  முஸ்லிம்கள் எதை எதிர்கொள்கிறார்கள் என்பதை விழிப்புணர்வு ஊட்டிட சமூக ஊடகங்களை பயன்படுத்திக் கொள்வது முக்கியமானது. அவர்களின் விஷயத்தில் நீதியை நிலைநாட்டிட இது உதவும்.
  இஸ்லாமிய நாடுகளின் அரசியல் அழுத்த்தின் முக்கியவத்துவத்தை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள இயலாது. இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை பாதுகாக்க சில முக்கிய நடவடிக்கைகளை எடுக்க இந்திய அரசிற்கு அழுத்தம் ஏற்படும்.
  இந்தியா மீதான அரசியல் அழுத்தம் முஸ்லிம்களுக்கு உதவ நல்ல வாய்ப்பாக பயன்படும். ஏனெனில் இந்திய அரசு முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் அநீதிகளை தடுக்க சக்தி பெற்றிருந்தும் அது இந்துத்துவ கும்பலுடன் இணைந்து செல்கிறது.
  முஸ்லிம்களின் மீதான முந்தைய தாக்குதல்களில் சுமார் ஆயிரம் முஸ்லிம்கள் பலியாகியுள்ளனர். 
  இந்திய முஸ்லிம்கள் சந்தித்து வரும் கொடுமைகளை தடுக்க உடனடியாக இவ்விஷயத்தில் நாம் தலையிட வேண்டும். அதுவே ஒரு மிகப்பெரும் அழிவு நேர்வதை தடுக்கும்.
  அரச மட்டத்திலோ தனிப்பட்ட ரீதியிலோ இன்று நாம் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் இந்திய முஸ்லிம்களின் எதிர்காலத்தை பாதுகாக்கவும் அவர்களின் கண்ணியமான வாழ்க்கைக்கும் மிகப்பெரிய முன்னெடுப்பாக அமையும்.
  அவர்களின் மதஉரிமை பாதுகாக்கப்பட சட்டபூர்வ நடவடிக்கையாக அமைய வேண்டும்
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Post a Comment

  Item Reviewed: இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள், நாம் செய்ய வேண்டியது என்ன..? Rating: 5 Reviewed By: The Murasu
  Scroll to Top