728x90 AdSpace

  • Latest News

    Mar 22, 2020

    வீட்டைவிட்டு வெளியேறுவது தற்கொலை முயற்சிக்கு சமமாகும் : நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தாஹீர் தெரிவிப்பு

    நிந்தவூர் –
    ஊரடங்கு சட்டம் முழுக்க பொது மக்களின் நலனைக் கருத்திக் கொண்டதாகவே இருக்கின்றது. அதனால், பொது மக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கி வேண்டும். இந்த ஒத்துழைப்பு நமது உயிரை பாதுகாத்துக் கொள்வதற்கானது என்பதனை புரிந்து செயற்பட வேண்டும். ஊரடங்கு சட்;டம் அமுலில் உள்ள வேளையில் வீதிக்கு செல்லுவது தற்கொலைக்கு எடுக்கப்படும் ஒரு முயற்சிக்கு சமமாகவே இருக்கின்றது.

    இவ்வாறு நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹீர் பொது மக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

    உலகில் கொரனா வைரஸ் தொற்றினால் மூன்று இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்துள்ளார்கள். இதனால், உலக நாடுகள் கொரனா வைரஸ் தாக்கத்திலிருந்து நாட்டையும், மக்களையும் பாதுகாத்துக் கொள்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. தற்போது இலங்கையிலும் கொரனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் என பலர் இனங் காணப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு சிகிச்சைகளும் அளிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

    இதனால், அரசாங்கம் கொரனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக பல நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கின்றன. அதில் ஒரு நடவடிக்கையாகவே ஊரடங்கு சட்டத்தினை அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது. இதற்கு முதல் நாட்டில் பல தடவைகள் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது மேற்கொள்ளப்படும் ஊரடங்கு சட்டம் முழுக்க பொது மக்களின் நலனைக் கருத்திக் கொண்டதாகவே இருக்கின்றது. அதனால், பொது மக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கி வேண்டும். இந்த ஒத்துழைப்பு நமது உயிரை பாதுகாத்துக் கொள்வதற்கானது என்பதனை புரிந்து செயற்பட வேண்டும். ஊரடங்கு சட்;டம் அமுலில் உள்ள வேளையில் வீதிக்கு செல்லுவது தற்கொலைக்கு எடுக்கப்படும் ஒரு முயற்சிக்கு சமமாகவே இருக்கின்றது.

    மேலும், கொரனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கு மருத்துவர்கள் பல்வேறு ஆலோசனைகளை நாளாந்தம் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். அதனை பின்பற்றி நடப்பது நமது கடமையாகும். 

    ஊரடங்கு சட்டத்தை மீறிய பலரை பொலிஸார் கைது செய்துள்ளார்கள். மேலும், ஊரடங்கு சட்டம் அமுலில் வேளையில் வீட்டை விட்டு வெளியேறுகின்றவர்களை கைது செய்யவும், அவர்களுக்கு மூன்று வருட சிறை தண்டனை வழங்கவும் அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆதலால், பொது மக்கள் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு விளிப்பாக இருப்பதுடன், கொரனா வைரஸ் தொற்ற்னை தடுப்பதற்கு அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கின்றேன்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வீட்டைவிட்டு வெளியேறுவது தற்கொலை முயற்சிக்கு சமமாகும் : நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தாஹீர் தெரிவிப்பு Rating: 5 Reviewed By: The Murasu
    Scroll to Top