728x90 AdSpace

  • Latest News

    Oct 9, 2019

    ‘ அடுத்த ஜனாதிபதி யார் என்பதனை நானே தீர்மானிப்பேன்’- ஹிஸ்புல்லாஹ்!

    ‘ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி ஒருவரைத் தீர்மானிக்கும் வேட்பாளராகவே நான் போட்டியிடுகிறேன். இது தவிர ஜனாதிபதியாகும் வேட்பாளர் நான் அல்ல. இந்த நாட்டைச் சரியாக முன்னெடுத்துச் செல்லவும் நாட்டைக் கட்டியெழுப்பக் கூடியவருமான ஒருவரையே ஜனாதிபதியாகத் தெரிவு செய்ய வேண்டும். அதற்கான சக்தியாக நான் இருப்பேன்’ என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநரும் ஜனாதிபதி வேட்பாளருமான எம்.எல். ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் மெட்ரோ நியூஸுக்குத் தெரிவித்தார்.
    ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஹிஸ்புல்லாஹ் 06.10.2019 காலை கட்டுப்பணம் செலுத்தினார். இந்த நிலையில் அவரைத் தொடர்பு கொண்டு ‘மெட்ரோ நியூஸ்’ கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
    அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்டில் எதிர்காலத்தில் இன, மதக் கலவரங்கள் வராமல் பாதுகாக்கக் கூடியவராகவும் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கக்
    கூடியவருமான ஒருவரையே ஜனாதிபதியாகத் தெரிவு செய்ய வேண்டும். எனவே, அதனை என்னால் செய்ய முடியும் என்ற நம்பிக்கையிலேயே இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறேன். இதன் மூலம் அடுத்த ஜனாதிபதியை யார் என்பதனை நானே தீர்மானிப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
    மெட்ரோ நியூஸ் -
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ‘ அடுத்த ஜனாதிபதி யார் என்பதனை நானே தீர்மானிப்பேன்’- ஹிஸ்புல்லாஹ்! Rating: 5 Reviewed By: The Murasu
    Scroll to Top