நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டுமாயின் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான அரசாங்கத்தினால் மாத்திரமே முடியும். அதனால், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸாவை வெற்றி பெறச் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியாக தொிவு செய்யப்பட்டால் மாத்திரமே நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த முடியும்.
இவ்வாறு ஐக்கிய தேசிய கட்சியின் சம்மாந்துறை அமைப்பாளரும், சம்மாந்துறை பிரதேச அபிவிருத்திக் குழுவின் ஒருங்கிணைப்புத் தலைவருமான எம்.ஏ.ஹஸன்அலி சம்மாந்துரையில் தமது அலுவலகத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும் போது தொிவித்தார்.
அவர் மேலும், கருத்துத் தோிவிக்கையில்,
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டைப் பொறுப்பேற்கும் போது பெரும் கடன் சுமை காணப்பட்டது. அக்கடன் சுமையில் பெரும்பகுதியை இன்றைய அரசாங்கம் தீர்த்து வைத்துள்ளது. கடன் சுமையிலிருந்து மீட்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நாட்டை மீண்டும் கடன் சுமைக்குள் தள்ளும் சகோதரர்களின் குடும்ப ஆட்சிக்கு வழி வகுக்க முடியாது.
இன்று நாடு பூராகவும் சஜித் பிரேமதாஸவின் அலை வீசிக் கொண்டிருக்கின்றது. நாட்டு மக்கள் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸவை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென்று தீர்மானித்து விட்டார்கள். முழு நாட்டிலும் சஜித் பிரேமதாஸவுக்கு தனிப்பட்ட வகையில் சுமார் 20 இலட்சம் வாக்குகள் உள்ளன. அத்தோடு ஐக்கிய தேசிய கட்சிக்குாிய வாக்கு வங்கள் உள்ளன. சிறுபான்மை மக்கள் அவருக்கு வாக்களிக்க தீர்மானித்துள்ளார்கள். மட்டுமல்லாது முனனாள் ஜனாதிபதியும், சஜித் பிரேமதாஸவின் தந்தையுமாகிய ரணசிங்க பிரேமதாஸவின் மீது பறறுக் கொண்ட மக்கள் சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களிப்பதற்கு தயாராக இருக்கின்றார்கள். இவ்வாறு எல்லாத் தரப்பினரும் சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களிப்பதற்கு தயாராக இருக்கின்றார்கள். இதனால், அவரது வெற்றி நிச்சயிகப்பட்ட ஒன்றாகியுள்ளது.
0 comments:
Post a Comment