மனிதனின் இயற்கையும்
செயற்கையும்
-------------------------------------
நமக்கான
மகிழ்ச்சி பதவிகளினால்
இடங்களினால்
பிறவற்றால் அமைவதில்லை
நம்மோடு இணைந்து
பயணிக்கும்
மனிதர்களைப் பொறுத்தே
அமைகிறது
மனிதன் இயற்கையாக
நல்லவன்
செயற்கைகள் அவனை
ஆட்கொள்ளும் போதுதான்
கெட்டவன் என்றாகி
விடுகிறான்
நிகழ் காலத்தில்
நமக்கு உதவவில்லையே
என்றுதான் பலரும்
கோபித்துக் கொள்கிறார்கள்
அவர்கள்
இறந்த காலத்தை
எண்ணிப் பார்ப்பதில்லை.
உதட்டளவில் சிாிக்கும்
மனிதர்கள் நிறைந்த பூமியில்
நயவஞ்சகத்துடன் வாழும்
நரகர்களே நன்மதிப்பை
பெறுகிறார்கள்.
ஆழம் அறியாமல்
காலைப் புதைத்து விட்டு
ஆட்களை நொந்து
கொள்கிறார்கள்
நாள் முழுதும் பலதையும்
கற்றுக் கொண்டிருக்கின்றோம்
மனிதர்களை மாத்திரம்
கற்றுக் கொள்ள முடிவதில்லை.
அவனது
இயற்கையும் செயற்கையும்
எப்பொது செயற்படுமென்று
யாருக்கும் புாிவதில்லை
---------------------
எம்.சஹாப்தீன் -
07.09.2019
செயற்கையும்
-------------------------------------
நமக்கான
மகிழ்ச்சி பதவிகளினால்
இடங்களினால்
பிறவற்றால் அமைவதில்லை
நம்மோடு இணைந்து
பயணிக்கும்
மனிதர்களைப் பொறுத்தே
அமைகிறது
மனிதன் இயற்கையாக
நல்லவன்
செயற்கைகள் அவனை
ஆட்கொள்ளும் போதுதான்
கெட்டவன் என்றாகி
விடுகிறான்
நிகழ் காலத்தில்
நமக்கு உதவவில்லையே
என்றுதான் பலரும்
கோபித்துக் கொள்கிறார்கள்
அவர்கள்
இறந்த காலத்தை
எண்ணிப் பார்ப்பதில்லை.
உதட்டளவில் சிாிக்கும்
மனிதர்கள் நிறைந்த பூமியில்
நயவஞ்சகத்துடன் வாழும்
நரகர்களே நன்மதிப்பை
பெறுகிறார்கள்.
ஆழம் அறியாமல்
காலைப் புதைத்து விட்டு
ஆட்களை நொந்து
கொள்கிறார்கள்
நாள் முழுதும் பலதையும்
கற்றுக் கொண்டிருக்கின்றோம்
மனிதர்களை மாத்திரம்
கற்றுக் கொள்ள முடிவதில்லை.
அவனது
இயற்கையும் செயற்கையும்
எப்பொது செயற்படுமென்று
யாருக்கும் புாிவதில்லை
---------------------
எம்.சஹாப்தீன் -
07.09.2019
0 comments:
Post a Comment