ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை அடுத்து,
ஜனாதிபதியையும் அமைச்சர் சஜித் பிரேமதாஸவையும் இணைந்து புதிய கூட்டணி
அமைக்க திட்டப்பட்டுள்ளது.
புதிய கூட்டணியை உருவாக்கும்
செயற்பாட்டில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பிர்கள் ஈடுபட்டு வருவதாக
கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில்ட
கலந்துரையாடல்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. புதிய முன்னணியின் தலைவராக
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய
எதிர்வரும் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரமேதாஸவையும் பிரதமராக ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேனவையும் பெயரிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிய
வருகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள், ஐக்கிய தேசிய
கட்சியின் சஜித் தரப்பினர் மற்றும் சிவில் அமைப்புகள் சில இணைந்து புதிய
கூட்டணியை உருவாக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்ரீலங்கா
சுதந்திர கட்சிக்குள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க மீண்டும்
நுழைந்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அவர் பல்வேறு
பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது
மைத்திரியின் வெற்றியின் பின்னணியில் சந்திரிக்கா செயற்பட்டிருந்தார்.
இந்நிலையில் சந்திரிக்கா தொடர்பில் மிகவும் அவதானமாக செயற்படுமாறு முன்னாள்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்களுக்கு
எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment