கண்டியில் பலத்த பாதுகாப்பு - THE MURASU

Jul 7, 2019

கண்டியில் பலத்த பாதுகாப்பு

முஸ்லிம் அடிப்படைவாதத்திற்கு எதிராக பொதுபல சேனாவினால் இன்று கண்டியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டத்தை முன்னிட்டு கண்டி நகாிலும், அதனைச் சூழவுள்ள பிரதேசங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இராணுவத்தினரும், விசேட அதிரடிப்படையினரும், பொலிஸாரும் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.


பொது பலசேனாவின் இன்றைய கூட்டத்திற்கு 10ஆயிரம் பிக்குகளும், ஒரு இலட்சம் பௌத்த சிங்கள மக்களும் கலந்து கொள்ள இருப்பதாக பொதுபல சேனா தொிவித்துள்ளது.

அவசலகாலச் சட்டம் அமுலில் உள்ள இன்றைய சூழலில் இத்தகைய ஒன்று கூடலைச் செய்வது சட்ட ரீதியாக முடியாததாகும். பாதுகாப்பு அமைச்சை தம்வசம் வைத்துள்ள ஜனாதிபதி இதனை தடுப்பதற்குாிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. அதே வேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனை தடை செய்யுமாறு கோாிக்கையை ஜனாதிபதியிடம் முன் வைக்கவுமில்லை. இனவாதக் கோசம் எல்லா தரப்பினருக்கும் அரசியல் இலாபத்திற்கு தேவையான ஒன்றாகவே இருக்கின்றது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here