குண்டுத் தாக்குதலை தடுத்து நிறுத்துவதற்கு ஜனாதிபதி தவறியுள்ளார் - பொலிஸ் மாஅதிபர் பூஜித ியசுந்தர - THE MURASU

Jun 3, 2019

குண்டுத் தாக்குதலை தடுத்து நிறுத்துவதற்கு ஜனாதிபதி தவறியுள்ளார் - பொலிஸ் மாஅதிபர் பூஜித ியசுந்தர

உயிர்த்த ஞாயிறு அன்று நடைபெற்ற தற்கொலை தாக்குதலை ஜனாதிபதி தடுத்து நிறுத்துவதற்கு தவறி விட்டார் என்று கட்டாய விடுமுறையில் இருக்கின்ற பொலிஸ் மா அதிபர் பூஜித ஜளசுந்தர உயர் நீதிமன்றத்தில் தாக்குல் செய்துள்ள மனுவில் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் புலனாய்வு பிரிவுக்கும், அரசாங்க பாதுகாப்பு படைகளுக்கும் இடையில் காணப்பட்ட தொடர்பாடல் இடைவெளியை 20பக்கங்கள் கொண்ட தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய பயங்கரவாதிகள் தொடர்பாக நடைபெற்ற விசாரணையை நிறுத்துமாறு பிரதான புலனாய்வு அமைப்பாகிய அரச புலனாய்வு சேவை (SIS) ஒரு வருடத்திற்கு முன்னர் தனக்கு உத்தரவிட்டதென்றும் மேற்படி மனுவில் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளதாக ஏ.எப்.பி செய்தி சேவை தெரிவித்துள்ளது.

குண்டுத் தாக்குல் தொடர்பில் குற்றம்சாட்டப்படும் தேசிய தௌஹீத் ஜமாஅத் உட்பட முஸ்லிம் தீவிரவாத குழுக்களின் மீதான விசாரணைகளை பொலிஸ் திணைக்களத்தின் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு  நிறுத்த வேண்டுமென அரச புலனாய்வு பிரிவு கேட்டுக் கொண்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
205 பேர் கொல்லப்பட்டதனை அடுத்து பொலிஸ்மா அதிபர் பொலிஸ் மாஅதிபர் பதவி விலகுவதற்கு மறுப்புத் தெரிவித்ததால் வெரை ஜனாதிபதி மைத்திரிபால சிறசேன  கட்டாய விடுமுறையில் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் இத்தாக்குதல் சம்பவத்திற்கு பொறுப்பேற்று பதவி விலகினால் தனக்கு ராஜதந்திர பதவி வழங்க முன் வந்ததாகவும், புலனாய்வு பிரிவின் தோல்விக்கு தான் பொறுப்பில்லை என்பதனால் பதவி விலக மறுத்ததாகவும் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளதாகவும் ஏ.எப்.பி தனது செய்தியில் தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here