பயங்கரவாதி சஹரானின் மனைவி, மகளின் போட்டோ வெளியானது! - THE MURASU

May 13, 2019

பயங்கரவாதி சஹரானின் மனைவி, மகளின் போட்டோ வெளியானது!

இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹரானின் மனைவி மற்றும் மகளின் ஒளிப்படம் முதன்முறையாக வெளியாகியுள்ளது.
கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் பிரதான சூத்திரதாரியான சஹரான் உயிரிழந்துள்ளதாக நம்பப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து கடந்த 26ஆம் திகதி கல்முனையில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டுத்தாக்குதலில் படுகாயமடைந்த சஹரானின் மனைவி மற்றும் மகள் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களிடம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளில் தினமும் பல்வேறுபட்ட அதிர்ச்சியளிக்க கூடிய தகவல்கள் வெளிவந்த வண்ணமுள்ளன.
இந்தநிலையில் தற்போது கொழும்பிற்கு அழைத்து வரப்பட்டுள்ள அவர்களிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும்நிலையிலேயே இந்த ஒளிப்படங்கள் வெளியாகியுள்ளன

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here