728x90 AdSpace

 • Latest News

  May 30, 2019

  ஞான­சார தேரரின் விடுதலை இன நல்லுறவுக்கு எதிரான முடிவு

  பி. மாணிக்கவாசகம் - 
  பொது­பலசேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கலகொட அத்தே ஞான­சார தேரர் சர்ச்­சைக்­கு­ரிய ஒரு பிர­முகர். சிறைத் தண்­டனை அனு­ப­வித்து வந்த அவ­ரு­டைய விடு­த­லையும் சர்ச்­சைக்­கு­ரி­ய­தாகி இருக்­கின்­றது. 
  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பொது மன்­னிப்பு வழங்கி அவரை விடு­தலை செய்­துள்ளார். நீதி­மன்றத் தீர்ப்­பிற்கு அமைய தண்­ட­னையை அனு­ப­வித்து வந்த ஒரு சிறைக் கைதியை அரச தலை­வ­ரா­கிய ஜனா­தி­பதி பொது மன்­னிப்பின் கீழ் தண்­டனை விலக்­க­ளித்து விடு­தலை செய்­யலாம். அதற்கு அவ­ரு­டைய நிறை­வேற்று அதி­காரம் என்ற அர­சியல் அந்­தஸ்­து­ட­னான அதி­கார பலம்,  உரிமை அவ­ருக்கு இருக்­கின்­றது. அதனை கேள்­விக்கு உட்­ப­டுத்த முடி­யாது.
  ஆனால், பொது­ப­ல­சேனா என்ற சிங்­கள  பௌத்த தீவி­ர­வாத அமைப்­பா­னது, நாட்டில் சிறு­பான்மை மதத்தைச் சேர்ந்த மக்­க­ளுக்கு எதி­ராக வெறுப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­து­வதில் பகி­ரங்­க­மா­கவே செயற்­பட்டு வந்­துள்­ளது. இந்த மத வெறுப்­பு­ணர்வின் அடிப்­ப­டையில் முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராக அவர்­க­ளு­டைய மத கலா­சார நட­வ­டிக்­கை­களைக் கண்­டித்தும், எதிர்த்தும் போர்க்குரல் எழுப்பி ஒரு போராட்­டத்­தையே நடத்தி வந்­துள்­ளது.
  ஜன­நா­ய­கத்தை உயிர்மூச்­சாகக் கொண்­டுள்­ள­தா­கவே எமது நாடு கரு­தப்­ப­டு­கின்­றது. இந்த நாட்டில் இனங்­க­ளுக்­கி­டையில் குரோ­தத்­தையும் பகைமை உணர்­வையும் உரு­வாக்கி பொது அமை­திக்கும் பொது­மக்­களின் பாது­காப்­புக்கும் பங்கம் ஏற்­ப­டுத்­து­கின்ற ஜன­நா­யக விரோத நட­வ­டிக்­கையில் ஈடு­ப­டு­வ­தற்கு பொது­ப­ல­சேனா அமைப்­புக்கு இட­ம­ளிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. 
  அர­சியல் செல்­வாக்கின் ஊடாக,  ஜன­நா­யக விரோதப் போக்கைக் கொண்ட இந்த அமைப்பை பொதுச் செய­லா­ள­ரா­கிய கல­கொட அத்தே ஞான­சார தேரரே வழி­ந­டத்தி வந்­துள்ளார். யுத்தம் 2009 ஆம் ஆண்டு முடி­வுக்கு வந்­த­தை­ய­டுத்து, 2012 ஆம் ஆண்டு முதல் கிறிஸ்­த­வர்­க­ளுக்கும், இஸ்­லா­மி­யர்­க­ளுக்கும் எதி­ரான மதரீதி­யான வன்­மு­றைகள் அவ­ரு­டைய தலை­மை­யி­லேயே இடம்­பெற்று வந்­துள்­ளன. இதனை நாடே நன்­க­றியும். இந்த உண்மை சர்­வ­தேச அள­விலும் வெளிப்­பட்­டி­ருந்­தது.
  அசின் விராத்தும் ஞான­சார தேரரும்
  இஸ்­லா­மி­யர்­க­ளுக்கு எதி­ரான வன்­முறை அர­சி­யல்­போக்கைக் கொண்ட மியன்மார் நாட்டின் 969 என்ற அமைப்பைச் சேர்ந்த முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான விரோதப் போக்கைக் கொண்ட அசின் விராத்து என்ற பௌத்த பிக்­குவின் வழி­மு­றையை ஞான­சார தேரர் பின்­பற்­று­வ­தா­கவும் ஒரு சந்­தேக உணர்வு வெளிப்­பட்­டி­ருந்­தது.   
  நியூயோர்க் நகரின் டைம் சஞ்­சிகை, பௌத்த பயங்­க­ர­வாத முகம் என்று மியன்­மாரின் அசின் விராத்­துவை தனது அட்­டைப்­பட செய்­தி­யொன்றில் வர்­ணித்­தி­ருந்­தது. இதனை மறுத்­து­ரைத்த அசின் விராத்து அந்த சஞ்­சி­கையின் தவ­றான பிர­சா­ரத்­தினால் தனது இஸ்­லா­மிய எதி­ரிகள்  தன்னை பர்­மாவின் பின்­லாடன் என்று குறிப்­பி­டு­வ­தாகக் குற்றம் சாட்­டி­யி­ருந்தார். 
  அதே­வேளை, அசின் விராத்து பற்­றிய செய்­திக்­கட்­டு­ரையின் மூலம் டைம் சஞ்­சிகை பௌத்த மதத்­திற்கு அவ­தூறு ஏற்­ப­டுத்தி, நாட்டின் தேசிய நல்­லி­ணக்க முயற்­சி­களைப் பாதித்து, முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றையைத் தூண்­டி­வி­டு­வ­தாக பர்­மிய ஜனா­தி­பதி தெயின் செயின் குற்றம் சாட்­டி­யி­ருந்தார். அத்­துடன் அசின் விராத்து உன்­னத புருஷர் என்றும் புத்­த­பெ­ரு­மானின் புதல்வன் என்றும் அவர் புகழ்ந்­தி­ருந்தார். 
  தனது 14 ஆவது வயதில் பாட­சாலைக் கல்­வியைக் கைவிட்டு பௌத்த பிக்­கு­வாக மாறிய அசின் விராத்து, 33 ஆவது வயதில் பர்­மாவின் 969 இயக்­கத்தில் இணைந்து அர­சி­யலில் ஈடு­பட்டு, 35 ஆவது வயதில் நீதி­மன்றம் ஒன்­றினால் 2003 ஆம் ஆண்டு, 25 வருட சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்டார். ஆனால் பர்­மிய அர­சியல் மறு­சீ­ர­மைப்பைத் தொடர்ந்து, 2012 ஆம் ஆண்டு பர்­மிய ஜனா­தி­பதி தெயின் செயின் சிறை வைக்­கப்­பட்­டி­ருந்த அர­சியல் கைதி­களை விடு­தலை செய்­த­போது அசின் விராத்தும் விடு­தலை பெற்று சிறையில் இருந்து வெளி­யேறி, ரொஹிங்­கிய முஸ்­லிம்­களை மூன்­றா­வது நாடொன்­றிற்கு வெளி­யேற்­று­கின்ற ஜனா­தி­ப­தியின் நட­வ­டிக்­கைக்கு ஆத­ர­வான பேர­ணியை நடத்­தி­யி­ருந்தார். இதனைத் தொடர்ந்து அங்கு முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள் மிக­மோ­ச­மாக இடம்­பெற்­றி­ருந்­தன.
  இத்­த­கைய பின்­ன­ணியைக் கொண்ட அசின் விராத்து, 2014 ஆம் ஆண்டு செப்­டம்பர் மாதம் கொழும்பில் பொது­ப­ல­சேனா அமைப்­பு ஒழுங்கு செய்தி­ருந்த பௌத்த சங்­கத்தின் மாநாட்டில் கலந்து கொண்­டி­ருந்­த­துடன், தமது 969 என்ற அமைப்பு பொது­ப­ல­சே­னா­வுடன் இணைந்து செயற்­படத் தயா­ராக உள்­ளது என குறிப்­பிட்­டி­ருந்தார். 
  களுத்­துறை மாவட்­டத்தின் அளுத்­கம, பேரு­வளை, தர்­கா­நகர் ஆகிய இடங்­களில் பொது­பல சேனா அமைப்பின் தூண்­டு­தலில் திட்­ட­மிட்ட வகையில் அரங்­கேற்­றி­ய­தாகக் கூறப்­ப­டு­கின்ற முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள் அந்த வருடம் ஜூன் மாதம் இடம்­பெற்­றி­ருந்த ஒரு பின்­ன­ணி­யி­லேயே இந்த பௌத்த மாநாடு கொழும்பில் நடை­பெற்­றது என்­பது கவ­னத்­திற்­கு­ரி­யது. இந்த மாநாட்டில் மியன்­மாரைச் சேர்ந்த பௌத்த பிக்கு அசின் விராத்து, கலந்து கொண்­டதும், பொது­ப­ல­சேனா அமைப்­புடன் இணைந்து செயற்­படத் தயா­ராக இருப்­ப­தாகத் தெரி­வித்த அவ­ரு­டைய கருத்தும், இலங்கை முஸ்­லிம்கள் மத்­தியில் மட்­டு­மல்­லாமல் ஏனைய மத சிறு­பான்மை இன மக்­க­ளி­டை­யேயும் தமது எதிர்­காலம் குறித்த அச்­சத்­தையும் பீதி­யையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. 
  அர­சியல் செல்­வாக்கும்  அரச பாது­காப்பும்
  முஸ்­லிம்­க­ளுக்கும், கிறிஸ்­த­வர்­க­ளுக்கும் எதி­ரான மத, இன ரீதி­யான வெறுப்­பு­ணர்­வுடன் துணி­க­ர­மாகச் செயற்பட்ட ஞான­சார தேர­ருக்கு எதி­ராக நாட்டின் சட்­டமும் ஒழுங்கும் எந்த நட­வ­டிக்­கை­யையும் எடுக்­க­வில்லை. குறிப்­பாக களுத்­துறை மாவட்­டத்தின் அளுத்­கம, தர்­கா­நகர், பேரு­வளை போன்ற இடங்­களில் இடம்­பெற்ற சிங்­கள பௌத்­தர்­களும், பௌத்த பிக்­கு­களும் இணைந்து ஞான­சார தேரரின் தலை­மையில் வன்­மு­றைகள் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக முறைப்­பா­டுகள் செய்தி­ருந்த போதிலும், பொலி­சாரோ அல்­லது சட்டம் ஒழுங்கும் மற்றும் பொது­மக்­களின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்த வேண்­டிய தேசிய பாது­காப்பு என்­ப­வற்­றுக்குப் பொறுப்­பான அமைச்­சர்கள் மட்­டத்­தி­லோ எது­வித நட­வ­டிக்­கை­யும் மேற்­கொள்­ள­வில்லை. 
  இங்கு இடம்­பெற்ற வன்­மு­றை­களில் மாத்­திரம் 4 பேர் உயி­ரி­ழந்­தனர். எண்­ப­துக்கும் அதி­க­மா­னோர் காய­ம­டைந்­தனர். முஸ்­லிம்­களின் வீடுகள், வர்த்­தக நிலை­யங்கள், தொழிற்­சா­லைகள், பள்­ளி­வா­சல்கள், சிறுவர் பாட­சா­லைகள் என்­பன அடித்து நொறுக்­கப்­பட்­டன. தீயிட்டு நாச­மாக்­கப்­பட்­டன. பத்­தா­யிரம் பேர் வரையில் வீடு­க­ளையும் வசிப்­பி­டங்­க­ளையும் இழந்து அக­தி­க­ளா­கினர். 
  இந்தப் பேர­ழி­வுகள் பற்­றிய காணொ­ளிகள், கண்­கண்ட சாட்­சி­களின் வாக்­கு­மூ­லங்கள் என்­பன ஊட­கங்­க­ளிலும், சமூக வலைத்­த­ளங்­க­ளிலும் வெளி­யாகி அனை­வ­ரு­டைய கவ­னத்­தையும் ஈர்த்­தி­ருந்­தன. அந்த வன்­மு­றை­க­ளுக்குக் கார­ண­மா­ன­வர்­களை நீதியின்முன் நிறுத்த வேண்­டிய பொறுப்­பு­மிக்க தரப்­பி­ன­ரு­டைய கவ­னத்­தையும் இந்த சம்­ப­வங்கள் ஈர்த்­தி­ருக்க வேண்டும். ஆனாலும், பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு உரிய நீதி கிடைக்கும் வகையில் சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ள் நட­வ­டிக்­கைகள் எடுக்­க­வில்லை.
  இந்த வன்­மு­றை­க­ளுக்கு ஞான­சார தேரரின் தலை­மை­யி­லான பொது­ப­ல­சேனா அமைப்பும், அந்த அமைப்பைச் சேர்ந்த சிங்­கள பௌத்­தர்கள் மற்றும் பௌத்த பிக்­கு­க­ளுமே காரணம் என பர­வ­லாகக் குற்றம் சுமத்­தப்­பட்­டி­ருந்­தது. ஆயினும் அந்தக் குற்­றச்­சாட்­டுக்­களை ஞான­சா­ர­தேரர் மறுத்­து­ரைத்­தி­ருந்தார். அவ­ருக்கு எதி­ராக சட்­டமும் பாய­வில்லை. நீதியும் தனது அதி­கா­ரத்தைப் பிர­யோ­கிக்­க­வில்லை.
  முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பகி­ரங்­க­மாக வன்­மு­றை­களில் ஈடு­பட்­டது மட்­டு­மல்­லாமல், அமைச்­சர்­க­ளான ரிசாத் பதி­யுதீன் மற்றும் மனோ கணேசன் ஆகி­யோ­ரு­டைய அமைச்சு அலு­வ­ல­கங்­க­ளிலும் ஞான­சார தேரர் தமது பிக்­குகள் அணி­யுடன் புகுந்து அமைச்­சர்­களின் நட­வ­டிக்­கைகள் குறித்து அத்­து­மீ­றிய வகையில் முரட்டுத் தன­மாக நடந்து கொண்ட சம்­ப­வங்­களும் இடம்­பெற்­றி­ருந்­தன. அது மட்­டு­மல்­லாமல் அவ­ரு­டைய உரை­களும், ஊடக சந்­திப்­பு­க­ளும்­கூட மத வெறுப்­பு­ணர்வை ஊட்­டு­வ­தா­கவும், குறிப்­பாக முஸ்­லிம்­க­ளையும் இஸ்லாம் மதத்­தையும் நிந்­திக்­கின்ற வகை­யி­லான கருத்­துக்­களை உள்­ள­டக்­கி­ய­தா­கவுமே அமைந்­தி­ருந்­தன. 
  இந்த நட­வ­டிக்­கைகள் யாவும் யுத்­தத்­திற்குப் பின்­ன­ரான காலத்தில் இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்­தையும், நல்­லு­ற­வையும், சக­வாழ்­வையும் ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக அர­சாங்­கம் எடுத்தி­ருந்த முயற்­சி­க­ளுக்­கான செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்த ஒரு சூழ­லி­லேயே இடம்­பெற்­றி­ருந்­தன. 
  யுத்தம் கார­ண­மாக இனங்­க­ளுக்­கி­டையே ஏற்­பட்­டி­ருந்த சந்­தேகம், அச்சம், பயம் மற்றும் அர­சியல் பிர­சாரம் கார­ண­மாக ஏற்­பட்­டி­ருந்த வெறுப்­புணர்வு என்­ப­வற்றைப் போக்கி நிலை­மா­று­கால நீதியை நிலை­நாட்­டு­வ­தற்­கா­கவும், இனங்­க­ளுக்­கி­டையில் நிரந்­த­ர­மான அமை­தி­யையும் சமா­தா­னத்­தையும் ஏற்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே இந்த நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் முன்­னெ­டுத்­தி­ருந்­தது. ஆனால், அந்த முயற்­சி­க­ளுக்கு  முர­ணான முறை­யி­லேயே ஞான­சார தேரரின் செயற்­பா­டுகள் அமைந்­தி­ருந்­தன. ஆயினும் அவ­ருக்கு எதி­ராக எந்­த­வி­த­மான நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­ப­ட­வில்லை. மாறாக அவ­ருக்கு அரச ரீதி­யி­லான ஆத­ரவும் பாது­காப்பும் வழங்­கப்­பட்­டி­ருந்­த­தா­கவே பலரும் உணர்ந்­தார்கள். 
  இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த வேண்டும் என்­ப­தற்­காக அர­சாங்கம் தொட்­டிலை ஆட்டி, குழந்­தையையும் கிள்­ள­வி­டு­வ­து­போன்று ஞான­சார தேரரின் தலை­மை­யி­லான பொது­ப­ல­சேனா அமைப்­பி­ன­ரு­டைய நட­வ­டிக்­கைகள் வன்­முறை சார்ந்­த­தாகப் பல்­வேறு தளங்­களில் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன. 
  ஆறு வருட சிறைத் தண்­டனை 9 மாதங்­களில் முடிந்­தது 
  இந்த வகை­யி­லேயே ஊட­க­வி­ய­லாளர் பிரகித் எக்­னெ­லி­கொட காணாமல் ஆக்­கப்­பட்ட சம்­பவம் தொடர்­பி­லான வழக்கில், அவ­ரு­டைய மனைவி சந்­தியா என்­னெ­லி­கொ­டவை ஞான­சார தேரர் அச்­சு­றுத்­தி­யி­ருந்­த­தாகச் செய்­யப்­பட்ட முறைப்­பாட்­டை­ ய­டுத்து, நடை­பெற்ற வழக்கு விசா­ர­ணையில் ஞான­சார தேர­ருக்கு ஆறு­மாத சிறைத்­தண்­டனை விதித்துத் தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது.  
  பிரகித் எக்­னெ­லி­கொட காணாமல் ஆக்­கப்­பட்ட சம்­பவம் தொடர்பில் சந்­தே­கிக்­கப்­பட்ட 11 இரா­ணு­வத்­தினர் தொடர்­பி­லான விசா­ர­ணைகள் நடை­பெற்ற ஒரு சூழ­லி­லேயே ஞான­சார தேரர் சந்­தியா எக்­னெ­லி­கொ­டவை அச்­சு­றுத்­தி­யி­ருந்தார். அது மட்­டு­மல்­லாமல், ஹோமகம நீதி­மன்­றத்தில் இந்த வழக்கு நடை­பெற்றபோது நீதி­மன்­றத்­தி­னுள்ளே பிர­வே­சித்த ஞான­சார தேரர் நீதி­மன்ற நடை­மு­றை­க­ளுக்கு முர­ணான வகையில் நடந்து கொண்­டதன் கார­ண­மாக அவர் மீது நீதி­மன்­றத்தை அவ­ம­தித்த குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டது. 
  எக்­னெ­லி­கொட சம்­பந்­த­மான வழக்கு விசா­ர­ணையில் தன்­னையும் இணைத்­துக்­கொள்ள வேண்டும் எனக் கோரிய ஞான­சார தேரர் நீதி­மன்­றத்தில் சமு­க­ம­ளித்­தி­ருந்த அரச சட்­டத்­த­ர­ணிகள், நீதி­மன்ற அதி­கா­ரிகள் பணி­யா­ளர்கள் மற்றும் பொலி­சாரைத் துரோ­கிகள் என சாடி­யி­ருந்தார். அத்­துடன் அங்கு பிர­சன்­ன­மா­கி­யி­ருந்த சந்­தியா எக்­னெ­லி­கொ­டவின் காத­ருகில் குனிந்து அவரை அச்­சு­றுத்தும் வகை­யி­லான வார்த்தை பிர­யோகம் செய்­தி­ருந்தார். 
  இதனால் அவ­ருக்கு எதி­ராக இரண்டு வழக்­குகள் பதி­வா­கின. சந்­தியா எக்­னெ­லி­கொ­டவை அச்­சு­றுத்­தி­ய­தாக ஒரு வழக்கும், ஹோமகம நீதி­மன்­றத்தில் வழக்கு விசா­ர­ணைகள் நடை­பெற்­ற­போது அத்­து­மீறி அங்கு புகுந்து நீதி­மன்­றத்தை அவ­ம­தித்­த­தாக மற்­று­மொரு வழக்­கு­மாக இரண்டு வழக்­குகள் பதிவு செய்­யப்­பட்­டன. மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தில் நடை­பெற்ற நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்கில் அவ­ருக்கு 19 வரு­டங்கள் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்டு, அதனை 6 வரு­டங்­களில் அனு­ப­விக்க வேண்டும் என தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது. இந்தத் தீர்ப்­புக்கு எதி­ராக செய்­யப்­பட்ட மேன்­மு­றை­யீட்டு வழக்கை விசா­ரணை செய்த உச்ச நீதி­மன்றம் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் வழங்­கிய தீர்ப்பை உறுதி செய்து தீர்ப்­ப­ளித்­த­தை­ய­டுத்து, ஞான­சார தேரர் சிறையில் அடைக்­கப்­பட்டார். ஆனால் சிறைத்தண்­டனை அனு­ப­வித்த 9 மாதங்­களில் அவர் அரச பொது மன்­னிப்பின் கீழ் விடு­தலை செய்­யப்­பட்­டுள்ளார்.சிறைத்­தண்­டனை அனு­ப­வித்த அவரை விடு­தலை செய்ய வேண்டும் என்று பொது­ப­ல­சேனா உள்­ளிட்ட பௌத்த அமைப்­புக்­களும், சிவில் அமைப்­புக்­களும் பௌத்த சிங்­கள தீவி­ர­வாத ஆத­ர­வா­ளர்­க­ளான அர­சி­யல்­வா­தி­களும் ஜனா­தி­ப­தி­யிடம் கோரிக்கை முன்­வைத்து, அர­சாங்­கத்­திற்கு அழுத்­தத்தைப் பிர­யோ­கித்­தனர். அவரை விடு­தலை செய்ய வேண்டும் என்று இன நல்லுறவுக்கு கோரி போராட்­டங்­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன. இந்த நிலையில் வெலிக்­கடை சிறைச்­சாலை வைத்­தி­ய­சா­லையில் இருந்த ஞான­சார தேரரை ஜனா­தி­பதி நேர­டி­யாகச் சந்­தித்து உரை­யா­டி­யதன் பின்னர் மே 23 ஆம் ்திகதி அவ­ருக்குப் பொது மன்­னிப்­ப­ளித்து விடு­தலை செய்தார். 
   இன நல்­லு­ற­வுக்கு முர­ணா­னது
  பல இனங்­க­ளையும் பல மதங்­க­ளையும் சேர்ந்த மக்கள் வாழ்­கின்ற நாட்டில், மத வன்­மு­றை­யையும், இன­வன்­மு­றை­யையும் தூண்­டி­விட்டு. பொது அமை­திக்குப் பங்கம் விளை­வித்து சிறு­பான்மை இனத்­த­வ­ரா­கிய முஸ்­லிம்கள் மீதான வன்­மு­றை­க­ளுக்குத் தூப­மிட்­டி­ருந்த ஒரு­வ­ருக்கு பொது மன்­னிப்பு வழங்­கி­யி­ருப்­பது மிகவும் பார­தூ­ர­மான நட­வ­டிக்­கை­யாகும் என்று சட்­டத்­த­ர­ணிகள், நீதித்­துறை சார்ந்­த­வர்கள், மனித உரிமைச் செயற்­பாட்­டா­ளர்கள், ஜன­நா­ய­க­வா­திகள், பொது அமைப்­புக்கள் மற்றும் அர­சி­யல்­வா­திகள் என பல­த­ரப்­பட்­ட­வர்­களும் கண்­ட­னங்­களை வெளி­யிட்­டி­ருக்­கின்­றனர். கவ­லை­க­ளையும் கரி­ச­னை­யை­யும்­கூட வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றனர். 
  யுத்­தத்தின் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் நாட்டில் நல்­லி­ணக்­கத்­தையும் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லு­ற­வையும் ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக சர்­வ­தேச நாடுகள், பன்­னாட்டு அமைப்­புக்­களின் உத­வி­யுடன் நல்­லி­ணக்க முயற்­சி­களை அர­சாங்கம் மேற்­கொண்டு வரு­கின்­றது. இத்­த­கைய ஓரு சூழ­லி­லேயே முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வெறுப்­பு­ணர்வை ஊட்­டு­வ­திலும், வன்­மு­றை­களைத் தூண்­டி­வி­டு­வ­திலும் ஞான­சார தேரர் பகி­ரங்­க­மாகச் செயற்­பட்­டி­ருந்தார். இது தொடர்பில் பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்கள் அவ­ருக்கு எதி­ராக சுமத்­தப்­பட்­டி­ருந்­தன. 
  அத்­த­கைய குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்ட ஒரு­வரே சண்­டித்­த­ன­மாக அத்­து­மீறிப் பிர­வே­சித்து, நீதி­மன்­றத்தை அவ­ம­தித்த குற்­றத்­திற்­காக 19 வரு­டங்கள் சிறைத் தண்­டனை விதிக்­கப்பட்டு, அதனை 6 வரு­டங்­களில் அனு­ப­விக்க வேண்டும் என்று சிறைச்­சா­லைக்கு அனுப்­பப்­பட்­டி­ருந்தார். அத்­த­கைய ஒரு­வரை ஜனா­தி­பதி தனது நிறை­வேற்று அதி­கா­ரத்தைப் பயன்­ப­டுத்தி பொது­மன்­னிப்­ப­ளித்து விடு­தலை செய்­தி­ருப்­பது, நாட்டின் இன நல்­லி­ணக்­கத்தின் மீது விழுந்த மோச­மான அடி­யா­கவே நோக்­கப்­ப­டு­கின்­றது. 
  அதே­நேரம் நீதி­மன்­றத்தை அவ­ம­தித்த ஒரு­வ­ருக்குப் பொது­மன்­னிப்பு வழங்­கப்­பட்­டி­ருப்­பது என்­பது, நாட்டின் நீதித்­து­றையை எள்ளி நகை­யாடி சிறு­மைப்­ப­டுத்­து­வ­தா­கவே அமைந்­துள்­ளது என்று நீதித்­துறை சார்ந்தவர்களும் சட்டத்தரணிகளும் கருதுகின்றார்கள். ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை சிறுபான்மை இனமக்கள் அரசாங்கத்தின் மீதும் நீதித்துறையின் மீதும் நம்பிக்கை இழக்கச் செய்வதற்கே வழிவகுத்துள்ளது.
  முன்னைய ஆட்சியாளர்கள் நீதித்துறையின் மீது அரசியல் ரீதியாக அழுத்தங்களைப் பிரயோகித்து, தலையீடு செய்திருந்தார்கள். அத்தகைய தலையீடுகளின்றி நீதித்துறை சுதந்திரமாக இயங்குவதற்கு நல்லாட்சியில் வழிவகுக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி உள்ளிட்ட நல்லாட்சி அரசாங்கத்தைச் சேர்ந்த தலைவர்கள் பிரசாரம் செய்திருந்தனர். நீதித்துறையில் அரசியல் தலையீடு இருக்கமாட்டாது என உறுதியளித்திருந்தனர். ஆனால், அவற்றுக்கு முரணான வகையில்,  குற்றவாளி என விசாரணைகளின் மூலம் உறுதி செய்யப்பட்ட ஒருவருக்கு நீதிமன்றம் வழங்கிய ஒரு தீரப்புக்கு விரோதமான முறையில் ஜனாதிபதியினாலேயே பொதுமன்னிப்பளிக்கப்பட்டுள்ள காரியம் நடந்தேறியிருக்கின்றது. 
  நாட்டை முன்னேற்றுவதற்கும், நாட்டு மக்களை வழிநடத்துவதற்கும், இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் உருவாக்குவதற்கான தேசிய ரீதியிலான நல்ல நோக்கத்தைக் கொண்டதாக ஒரு பொது மன்னிப்பு வழிங்கப்பட்டிருந்தால், அதனை அனைவரும் வரவேற்றிருப்பார்கள். அதனை ஒரு சிறந்த முன்னுதாரணமாகக் கொண்டாடியிருப்பார்கள். 
  ஆனால் ஞானசார தேருக்கு அளிக்கப்பட்ட பொதுமன்னிப்பானது, இன ஐக்கியத்திற்கும், நல்லிணக்கத்திற்கும் விடுக்கப்பட்ட பாரிய சவாலாகவே கருதப்படுகின்றது. அதுவும் சர்வதேச பயங்கரவாத பின்னணியில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளினால் தொடர் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் நடத்தி அப்பாவிகளான 250க்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட ஒரு பின்னணியில் இந்த பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருப்பது அரசாங்கத்தின் போக்கு குறித்து பல்வேறு தரப்பிலும் பலத்த சந்தேகங்களையும் அரசியல் ரீதியிலானதோர் அச்ச உணர்வையுமே ஏற்படுத்தியுள்ளது.              
  Virakesari 28.05.2019

  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Post a Comment

  Item Reviewed: ஞான­சார தேரரின் விடுதலை இன நல்லுறவுக்கு எதிரான முடிவு Rating: 5 Reviewed By: The Murasu
  Scroll to Top