அம்பாறையில், கடலுக்கு அடியில் சென்று தாக்குதல் நடத்தக்கூடிய அதிநவீன நீர்மூழ்கி இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன - THE MURASU

May 13, 2019

அம்பாறையில், கடலுக்கு அடியில் சென்று தாக்குதல் நடத்தக்கூடிய அதிநவீன நீர்மூழ்கி இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

அம்பாறையில், கடலுக்கு அடியில் சென்று தாக்குதல் நடத்தக்கூடிய அதிநவீன நீர்மூழ்கி இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்புப் படையினர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இந்த இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த அதிநவீன இயந்திரங்கள் எவ்வாறு இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டன என்பது குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை கடற்படையின் அதிவேக படகைவிட கூடுதல் வேகத்தில் இந்த நீர்மூழ்கி இயந்திரங்கள் செல்லும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கட்டு வருகின்றன.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here