பயங்கரவாதத்தை ஒழிப்பதில் தோல்வியை சந்திக்க நேரிடும் - முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா - THE MURASU

May 14, 2019

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் தோல்வியை சந்திக்க நேரிடும் - முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா

திறமையற்றவர்களால் இராணுவம் வழிநடத்தப்படுகின்றமையால் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் தோல்வியை சந்திக்க நேரிடுமென முன்னாள் இராணுவதளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நாட்டின் பாதுகாப்பு குறித்து நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே சரத்பொன்சேகா இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
”நாட்டில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதலை தொடர்ந்து ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையை விரைவில் சரிப்படுத்தி விடவோமென கூறுபவர்கள் மனோநிலை பாதிக்கப்பட்டவர்களாவர்.
மேலும் இலங்கைக்கு வெளிநாட்டு படைகளின் உதவிகள் அவசியமில்லை. பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு தேவையான அனைத்து பலமும் எமது படையினரிடம் உள்ளது.
அந்தவகையில் திட்டமிட்டு செயற்பட்டால், பாரிய பயங்கரவாத அமைப்பை அழிப்பதற்கு இரண்டு வருடங்கள் போதுமானது.
அதனைவிடுத்து திறமையற்றவர்கள் படையினரை வழிநடத்தினால் பயங்கரவாதத்தை ஒழிப்பது கடினம்” என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here