தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுவது பயங்கரவாதத்திற்குது சமமான - THE MURASU

May 13, 2019

தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுவது பயங்கரவாதத்திற்குது சமமான

தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுவது பயங்கரவாதத்திற்கு சமமான ஒரு செயலாகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமை காரணமாக தேர்தல்கள் ஒத்திவைக்கப்படக்கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பாதுகாப்பு நிலைமையை காரணம் காட்டி தேர்தலை பிற்போடுவதற்கான அவசியம் இல்லை என தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, சந்தேக நபர்கள் கைது செய்யப்படவேண்டியதே தற்போதைய காலகட்டத்தின் அடிப்படை செயற்பாடாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பான சூழ்நிலையை காரணம் காட்டி எந்த தரப்பினராவது தேர்தலை பிற்போட எதிர்பார்ப்பார்களாயின் அது பயங்கரவாதத்திற்கு சமனான செயல் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here