நாட்டு மக்களுக்கு இராணுவத் தளபதி எச்சாிக்கையும், அவசர வேண்டுகோளும், - THE MURASU

May 13, 2019

நாட்டு மக்களுக்கு இராணுவத் தளபதி எச்சாிக்கையும், அவசர வேண்டுகோளும்,

வடமத்திய மாகாணத்தில் முஸ்லிம்களின் சொத்துக்களுக்கு பாாிய சேதங்கள் எற்படுத்தப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் சுற்றித் திாியும் ஒரு சிலராலேயே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது எனத் தொிவித்துள்ள இராணுவத் தளபதி, 

பொலிஸார், இராணுவத்தினர், விசேட அதிரடிப் படையினர் என முப்படைகளும் அப்பகுதிகளுக்கு பாதுகாப்பு வழங்கி வருவதாகவும் தொிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்திற் கொண்டு நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள அவசர எச்சாிக்கையிலேயே இராணுவத் தளபதி மஹேஸ் சேனநாயக்க நாட்டு மக்களுக்கு  மேற்கண்டவாறு தொிவித்துள்ளார்.

அவர் மேலும் தொிவித்துள்ளதாவது,

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நேரத்தில் அல்லது ஏனைய நேரங்களில் நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் எவராது செயற்பட்டால் சட்டம் முழுமையாக செயற்படுத்தப்படும். வன்முறையில் ஈடுபடுவோர்களுக்கு எதிராக இராணுவத்தினாின் அதிகாரம் முழுமையாக பிரயோகிகப்படும்.

சட்டத்தை மீறிச் செயற்படுவோருக்கு எதிராக கடுமையாக நடவடிக்கைகள் எடுக்கப்படும்.  தேவையேற்பட்டால் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கும் தயங்கப் போவதில்லை.

சிலை இளைஞர்கள் குடிபோதையில் மோட்டார் சைக்கிளில் ரோந்து சென்று இவ்வாறு சிற்சில இடங்களில் தாக்குதல்களை நடத்தியுள்ளார்கள்.  

அரசாங்கத்தின் உத்தரவுகளையும், படையினாின் உத்தரவுகளையும் மீறிச் செயற்பட்டால் கடுமையான நடவடிக்கைள் எடுக்கப்படும்.  உத்தரவுகளை மீறுகின்றவர்களுக்கு எதிராக தேவை ஏற்பட்டால் துப்பாக்கிச் சூடு நடத்தவும் தயங்கப் போவதில்லை.  

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு ஆதரவு வழங்குமாறு அனைவாிடமும் கேட்டுக் கொள்கிறேன் எனவும்  இராணுவத் தளபதி  தொிவித்துள்ளார். 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here