728x90 AdSpace

 • Latest News

  May 13, 2019

  காரைதீவு பிரதேச சபை தவிசாளாின் இனவாத கருத்துக்களுக்கு உதவித் தவிசாளர் சாட்டையடி

  யு.கே.காலிதீன் -
  காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர்கி.ஜெயசிறில் அவர்கள் அண்மையில்இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் முஸ்லிம் தீவிரவாதிகள் என்ற சொல்லை அடிக்கடி பயன்படுத்தி தனதுகடந்தகாலத்தை மறந்து தன்னை நல்லவர்போல காட்ட முனைவது உண்மையில்பூனை கண்களை மூடிக்கொண்டு உலகம் இருட்டி விட்டதாக நினைப்பது போன்றேஉள்ளது.

  காரைதீவை சுற்றி மூன்று முஸ்லிம் ஊர்கள் இருக்கிறது அதனால் எங்களுக்கு பயமாகஇருக்கிறதுஎங்களது மக்கள் அச்சத்துடன் வாழ்வதாக கூறியிருக்கும் அவர் இரண்டு நாட்கள்மட்டுமே நடந்த சம்பவங்களை பற்றி பேசுவதுடன் கடந்த 30 வருடங்களாக நாட்டில் நடந்தவைதெரியாமல் கோமாவில் இருந்திருப்பதை எண்ணி நான் கவலைப்படுகிறேன்என காரைதீவுபிரதேச சபையின் பிரதித்தவிசாளரும்,ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் காரைதீவு முஸ்லிம் பிரதேசஅமைப்பாளருமான .எம்ஜாஹீர் தனது அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருந்த ஊடகசந்திப்பில்தெரிவித்தார்மேலும் பேசிய அவர்

  கடற்கரை வீதியால் போதைப்பொருள் கடத்தல் இடம்பெறுவதாகவும் அந்த வீதியில் இருக்கும் உபபொலிஸ் நிலையம் மற்றும் கடல் படை தளம் என்பன கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் அவர்தெரிவித்திருப்பது அவரின் முட்டாள் தனத்தின் உச்சமேபோதைப்பொருள் நடமாட்டம் இருப்பதைஅறிந்திருந்த காரைதீவு பிரதேசத்தின் ஆட்சியாளராக இருக்கும் தவிசாளர் காரைதீவு கிராம சேவகஎல்லைகளில் அமையப்பெற்றிக்கும் அந்த காவல் அரங்களுக்கு ஏன் அவர் அறிவிக்கவில்லைஅந்த போதைவஸ்து முகவர்களுடன் அவருக்கு ஏதாவது தொடர்பு இருக்கிறதாஎன சந்தேகிக்கமுடிகிறது.

  சில காட்டுமிராண்டி மிருகங்கள் முஸ்லிம் பிரதேசத்தில் இருந்துகொண்டு நாட்டை சீரழிக்கதிட்டம் இட்டபோது இந்த நாட்டின் பாதுகாப்பு கருதி பாதுகாப்பு தரப்புக்கு அவர்கள் பற்றியதகவல்களை வழங்கியது அப்பிரதேசத்தில் வசிக்கும் முஸ்லிம் பொதுமக்களே என்பதை அவர்கள்அறிந்து கொள்ள வேண்டும்அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து நிதிகொடுத்து நாட்டைசின்னாபின்னமாக்கும் எந்த ஒரு செயலையும் முஸ்லிங்கள் இதுவரை செய்ததாக வரலாறுகள்இல்லை இனியும் நடக்காது என்பதை இப்படியான இனவாத கருத்தாளர்கள் அறிந்து கொள்ளவேண்டும்.

  இந்த நாட்டின் பாதுகாப்பு படைக்கு நிகரான நாட்டு பற்று மிக்க முஸ்லிங்கள் வாழும் மூன்றுகிராமங்கள் காரைதீவை சுற்றி இருப்பது காரைதீவு மக்களுக்கு பாதுகாப்பு என்பதை தவிசாளர்அறிந்து கொள்ள வேண்டும்தியாக உணர்வு கொண்ட இலங்கை பாதுகாப்பு படையைகுறைகூறிக்கொண்டு சகோதரத்துவத்துடன் வாழும் முஸ்லீம் -தமிழ் மக்களின் உறவை சீரழித்துஇனவாத,மதவாத சாயம் பூசி அரசியல் இலாபம் அடைய அவர்கள் போடும் திட்டம் இந்த பிரதேசஎந்த மத மக்களிடமும் பலிக்காது என்பதுதான் உண்மை.

  இந்த நாட்டின் அரசியல்,பொருளாதாரம்,ஒற்றுமை,இறைமைகள் அழிக்கப்பட காரணமாகஅமைந்தவர்களின் முகவர் போன்று இயங்கிவரும் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் முஸ்லிம்சமூகத்தின் மீது சேறுபூசும் விதமாக விரல் நீட்ட அணுவளவும் தகுதி இல்லாதவரே.

  கடந்த காலங்களில் தமது சொத்துக்களை பறித்துவிட்டு 500 ரூபாயுடன் லட்சக்கணக்கானமுஸ்லிங்களை வடக்கிலிருந்து வெளியேற்றியதை மறந்து விட்டீர்களா ? இல்லை காத்தான்குடிபள்ளிவாசலில் தொழுதுகொண்டிருந்த முஸ்லீம் அப்பாவிகளை கொன்று குவித்தவர்கள் யார்என்பதை மறந்து விட்டீர்களா ? அருந்தலாவையில் மத போதகர்களை கொன்று குவித்தஅவர்கள்தான் சாய்ந்தமருது சந்தையில் குண்டை வெடிக்க செய்தார்கள் என்பது காலம் சொல்லும்இரத்த வரலாறுகள்இவற்றையெல்லாம் செய்தவர்களை நீங்கள் தியாகி பட்டம் கொடுத்துபேசிவிட்டு சிறிய ஒரு அமைப்பு செய்த ஈன செயலுக்கு ஒட்டுமொத்த முஸ்லிங்களையும்தீவிரவாதி போன்று பேசுகிறீர்கள்ஆனால் பல்லாயிர கணக்கான அப்பாவி உயிர்களைபலிகொடுத்தும்சொத்து சேதங்கள் இழந்தும் எப்போதுமே ஒட்டுமொத்த தமிழர்களைமுஸ்லிங்கள் தீவிரவாதிகளாக விரல் நீட்டியதில்லை.

  பிரதி அமைச்சை பறித்து விட்டு கௌரவ விஜயகலாவுக்கு இராஜாங்க அமைச்சு கொடுக்கப்பட்டஅரசியலின் அரிச்சுவடியே தெரியாத ஒருவரை அந்த மக்கள் தேர்ந்தெடுத்ததை எண்ணிவெட்கப்படும் காலம் கனிந்து வருகிறதுகௌரவ கிழக்கு ஆளுநரை பற்றி பேச அணுவளவும்தகுதி தராதரம் அற்ற காரைதீவு பிரதேச சபை தவிசாளர் அறிவை வளர்த்து கொள்ள அரசியலைபடிக்க முன்னர் முதலில் பாடசாலை கல்வியையும்,மத போதனைகளையும் கற்க வேண்டும் எனகேட்டு கொள்கிறேன்.

  கிழக்கில் உருவாக்கப்பட்டு வரும் தனியார் பல்கலைக்கழகமான .வெட்டி கேம்பஸ் எனும் அந்ததனியார் பல்கலைக்கழகம் பற்றி எந்தவித அறிவும் இல்லாது அவர் முட்டாள் போன்று பேசிபிரபலம் தேட முனைந்திருப்பது வேடிக்கையேஅனுமதி இன்றி இஸ்லாமிய பல்கலைகழகம்கட்டுவதாக கிழக்கு ஆளுநர் கௌரவ கலாநிதி எம்.எல்.எம்..ஹிஸ்புல்லாஹ் அவர்கள் மீதுகுற்றம் சொல்லும் காரைதீவு தவிசாளர் கிணற்று தவளையை விட மோசமானவர்அந்த பல்கலைபற்றி சாய்ந்தமருதில் வைத்து இந்த நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி தெளிவாக கூறியிருக்கிறார்அனுமதி இன்றி கட்ட அது ஒன்றும் சிறிய கழிவறை கட்டிடம் இல்லைஒரு பிரமாண்ட தனியார்பல்கலைகழகம்.

  ஒரு ஊடகம் மட்டுமே இதுசம்பந்தமாக பேசுவதாகவும் ஏனைய ஊடகங்கள் அமைதியாகஇருப்பதாகவும் தெரிவித்து இருக்கும் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் அந்த ஊடகத்தின்இயல்பை தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.சுமந்திர எம்பியிடம் கேட்டால்சொல்வார்என கூறி வைக்க விரும்புகிறேன்கிழக்கு தீவிரவாதிகளின் கூடாரமாகமாறிவருவதாக அவர் கூறியிருக்கும் அந்த கூற்றை நான் வன்மையாக கண்டிக்கிறேன்எமதுமக்களே அந்த தீவிரவாதிகளை அழிக்க முன்னின்று செயற்பட்டவர்கள் என்பதை இனவாதம்பேசும் காரைதீவு தவிசாளர் அறிந்து கொள்ள வேண்டும்.

  பல்லின சமூகமும் பின்னிப்பிணைந்து வாழும் காரைதீவு மண்ணுக்கு ஆளுமை எனும் சாமான்மருந்துக்கும் இல்லாத ஒருவரை தவிசாளராக நியமித்திருப்பதை எண்ணி கற்றறிந்த காரைதீவுமக்கள் கவலையில் உள்ளனர்முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் பிறந்த விபுல மண்ணின்கல்வி,இலக்கிய,நல்லொழுக்க ஜாம்பவான்கள் வாழும் காரைதீவில் இப்படியான ஒருவரை மக்கள்நிராகரிக்க வேண்டியது காலத்தின் தேவையாக உணரப்படுகிறது.

  தமிழ் சகோதரர்கள் கடுமையாக நடத்த பட்டதாகவும்முஸ்லிங்கள் அப்படி நடத்தப்பட்ட வில்லைஎன்றும் தெரிவித்திருப்பது உண்மையில் வேடிக்கையேகாரைதீவு பிரதேச சபை தவிசாளர்ஜெயசிறில் தூக்கத்தில் புலம்பும் குழந்தையாக மாறி தேர்தல் நாடகம் போடுகிறார்முதலில்கனவுகள் கண்டுகொண்டு பேசாமல் தூக்கத்தில் இருந்து விழித்து நாட்டில் நடப்பதை நன்றாகஅவதானிக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன் அத்துடன் இனிவரும் காலங்களில் முஸ்லிங்களைஇனவாதியாக கைநீட்டுவதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என தனது உரையில்காரைதீவு பிரதேச சபை பிரதி தவிசாளர் .எம்.ஜாஹீர் கேட்டுக்கொண்டார்.
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Post a Comment

  Item Reviewed: காரைதீவு பிரதேச சபை தவிசாளாின் இனவாத கருத்துக்களுக்கு உதவித் தவிசாளர் சாட்டையடி Rating: 5 Reviewed By: The Murasu
  Scroll to Top