காடையர்களின் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி இராஜாங்க அமைச்சர் ஹரீஸ். - THE MURASU

May 14, 2019

காடையர்களின் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி இராஜாங்க அமைச்சர் ஹரீஸ்.


(அகமட் எஸ். முகைடீன்)
புத்தளம் மாவட்டத்திலுள்ள கொட்டரமுல்ல பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக காடையர்களினால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைத் தாக்குதில் உயிரிழந்த பௌசுல் அமீர்டீனின் ஜனாசா நல்லடக்கம் இன்றைய தினம் (14) நடைபெற்றது. இதன்போது மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கலந்துகொண்டு அன்னாரின் குடும்ப உறவினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார். 

அத்தோடு காடையர்களின் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களான தும்பளதெனிய, தும்மோதர, கொட்டரமுள்ள போன்ற பிரதேசங்களுக்குச் நேரில் சென்று பார்வையிட்டதோடு பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here