இனவாதம் பேசியதன் விளைவு : புவக்பிட்டி பாடசாலையிலிருந்து 10 முஸ்லிம் ஆசிரியைகள் இடமாற்றம்! - THE MURASU

May 7, 2019

இனவாதம் பேசியதன் விளைவு : புவக்பிட்டி பாடசாலையிலிருந்து 10 முஸ்லிம் ஆசிரியைகள் இடமாற்றம்!

அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த பாடசாலையில் கடமையாற்றும் 10 ஆசிரியைகள் உட்பட 12 முஸ்லிம் ஆசிரியர்கள் வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற்றுக் கொண்டுள்ளனர்.
வலயக் கல்விப் பணிப்பாளர் தலையிட்டும் கூட ஹிஜாப் அணிந்த ஆசிரியைகள் அங்கு வரத்தேவையில்லையென குறித்த குழுவினர் அடம் பிடித்த நிலையில், இரு ஆசிரியைகள் களுத்துறைக்கும் மற்றும் பாத்திமா கல்லூரி, சேர் ராசிக் பரீட் கல்லூரி, பதியுதீன் முஸ்லிம் பாடசாலை ஆகிய பாடசாலைகளுக்கு மாற்றங்களைப் பெற்றுள்ளனர்.
புவக்பிட்டி தமிழ் பாடசாலையின் நிர்வாகமும் இது தொடர்பில் சர்ச்சைக்குழுவுக்கு சார்பாக நடந்து கொண்ட நிலையிலேயே இவ்விவகாரம் ஆளுனர் அசாத் சாலியின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு இவ்வாறு தீர்வு காணப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஆளுனர் ஆசாத் சாலி, இச்சம்பவம் கவலை தருவதாகவும் ஏலவே தெளிவான அறிவுறுத்தல்கள் இருந்தும் கூட இனரீதியிலான அடக்குமுறை உபயோகிக்கப்படுவது எதிர்காலத்தில் சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் எனவும் சுட்டிக்காட்டியதுடன், சந்தர்ப்ப சூழ்நிலையை கருத்திற்கொண்டும் மேலதிக சர்ச்சைகளை தவிர்க்கும் முகமாகவும் இவ்வழியில் தீர்வு காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here