கல்முனை மேயர் மக்களின் நலன்களில் அக்கறை காட்டாது போனால் அவரின் பதவிக்கு ஆப்பு வரும் : சுயேட்சைக் குழு உறுப்பினர் ஏ.ஆர்.எம்.அஸீம் எச்சரிக்கை - THE MURASU

Dec 4, 2018

கல்முனை மேயர் மக்களின் நலன்களில் அக்கறை காட்டாது போனால் அவரின் பதவிக்கு ஆப்பு வரும் : சுயேட்சைக் குழு உறுப்பினர் ஏ.ஆர்.எம்.அஸீம் எச்சரிக்கை

சஹாப்தீன் -
கல்முனை மாநகர சபையின் மேயர் மக்களின் நலன்களில் அக்கறை கொண்டு செயற்படாதுள்ளார். அவர் தான் நினைப்பதனைப் போன்று தொடர்ந்தும் செயற்படுவாராயின் அவரின் மேயர் பதவிக்கும் ஆப்பு வருமென்று தெரிவித்துக் கொள்கின்றேன்.
இவ்வாறு கல்முனை மாநகர சபையின் சுயேட்சைக் குழு (தோடம்பழம்) உறுப்பினர் ஏ.ஆர்.எம்.அஸீம் கல்முனை எஸ்.எல்.ஆர் மண்டபத்தில் நடைபெற்ற ஊடகவியாளர் மாநாட்டில் தெரிவித்தார். மாநகர சபையின் எதிர்த் தரப்பு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்ட இம்மாநாட்டில் அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
கல்முனை மாநகர சபையின் மாதாந்தக் கூட்டங்களில் மாதாந்த கணக்கறிக்கையை தருமாறு கடந்த எட்டு மாதங்களாக கேட்டுக் கொண்டிருக்கின்றோம். ஆனால், கணக்கு அறிக்கை தரப்படுவதில்லை. நிதி நடவடிக்கைகள் குறித்து கணக்கு பரிசோதகர்கள் மேற்காண்ட நடவடிக்கைளின் போது குறைபாடுகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. திண்மக் கழிவு அகற்றப்படாமை காரணமாக பல வீதிகளிலும், வீடுகளிலும் துர்நாற்றம் வீசிக் கொண்டிருக்கின்றது. மாநகர சபையின் கட்டளைச் சட்டத்திற்கு ஏற்ப நிதிக் குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், அதனை மேயர் அங்கிகாரமற்றதொன்றாகவே வைத்துக் கொண்டிருக்கின்றார்.
கல்முனை மாநகர சபைக்கு மக்கள் எம்மை; பாரிய அபிவிருத்திகளைச் செய்வதற்காக அனுப்பவில்லை. தெருமின் விளக்கு, திண்மக் கழிவகற்றல் போன்ற சேவைகளைச் செய்வதற்காகவே அனுப்பியுள்ளார்கள். கல்முனை மாநகரம் ஒரு சுத்தமான ஒன்றாக விளங்க வேண்டுமென்றே மக்கள் விரும்புகின்றார்கள். மேயர் மக்களின் இத்தகைய நலன்களில் அக்கறை கொண்டு செயற்படாதுள்ளார். இவ்வாறு மேயர் தான் நினைப்பதனைப் போன்று தொடர்ந்தும் செயற்படுவாராயின் அவரின் மேயர் பதவிக்கும் ஆப்பு வருமென்று தெரிவித்துக் கொள்கின்றேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here