நாமல் குமாரவின் அலைபேசி வெளிநாட்டுக்கு அனுப்பப்படவுள்ளது - THE MURASU

Dec 6, 2018

நாமல் குமாரவின் அலைபேசி வெளிநாட்டுக்கு அனுப்பப்படவுள்ளது

ஊழல் ஒழிப்பு பிரிவின் நடவடிக்கை பணிப்பாளர் நாமல் குமாரவின் அலைபேசியில் இருந்து அழிக்கப்பட்ட தரவுகளை மீட்பதற்காக வெளிநாடொன்றுக்கு அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ள குறித்த அலைபேசி குரல் ஒளிப்பதிவுகள் சில அழிக்கப்பட்டுள்ளமையால், அதன் தரவுகளை மீட்பதற்காக, அவரது அலைபேசியை தயாரித்த நிறுவனமான ஹொங்​ஹொங் நாட்டுக்கு அடுத்த வாரமளவில் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக, குற்றப்புலனாய்வு பிரிவினர் நேற்று கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்கவிடம் அறிவித்தனர்.
அதற்கமைய நீதிமன்றத்தின் பொறுப்பிலுள்ள வழக்குப் பொருட்களில் ஒன்றான குறித்த அலைபேசி குற்றப்புலனாய்வு பிரிவினரின் கோரிக்கைக்கமைய, நீதவான் விடுவித்துள்ளார்.

Post Bottom Ad

Responsive Ads Here