பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அரசியலமைப்பை மீறிவிட்டார் - ஜே.வி.பியின் தலைவர் - THE MURASU

Dec 21, 2018

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அரசியலமைப்பை மீறிவிட்டார் - ஜே.வி.பியின் தலைவர்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அரசியலமைப்பை மீறிவிட்டார் என குற்றஞ்சாட்டிய ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க எம்.பி., அமைச்சரவையில் அங்கம் வகிக்கவேண்டியவர்களின் எண்ணிக்கை 30 ஆகும் எனும், 35 பேரின் பெயர்கள் அடங்கிய பட்டியலே ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அந்த பட்டியலை அம்பலப்படுத்துமாறு கோரிநின்றார்.
நாடாளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுகொண்டிருக்கும் இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை, தேசிய அரசாங்கமாக கணக்கிலெடுத்தே, அரசமைப்பை பிரதமரும் மீறியுள்ளார். அரசமைப்பை பாதுகாப்பதற்காக நாங்கள் கடந்த சில நாள்களாக பல்வேறான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தோம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here