இலவச சீர் உடையும் இல்லை ஜனவரிக்கு எங்கள் பிள்ளைகளை எப்படி பாடசாலைக்கு அனுப்புவது? - THE MURASU

Dec 6, 2018

இலவச சீர் உடையும் இல்லை ஜனவரிக்கு எங்கள் பிள்ளைகளை எப்படி பாடசாலைக்கு அனுப்புவது?

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்க கோரி கடந்த இரண்டு மூன்று மாதங்களாக பேச்சுவார்த்தைகளும் வேலை நிறுத்த போராட்டங்களும் முன்னெடுக்கபட்டு வந்தன. இதற்கு ஆதரவாக நாடு முழுவதுமாக பெருந்தோட்ட மக்களுக்கு பல அமைப்புகள் போராட்டங்களை முன்னெடுத்தது. மலையக இளைஞர்களின் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் கொழும்பு காலி முகத்திடலில் நடைபெற்றது. இந்த விடயம் தொடர்பாக முன்னால் பிரதமர்களிடமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களிடமும் பேச்சுவாரத்தையும் நடாத்தபட்டது. ஆனால் இது வரைக்கும் எந்த விதமான தீர்வுகளும் எட்டபடாத நிலையில் தற்போது தொடர்ந்து  தோட்ட கம்பனிகளை முடக்கும் போராட்;டம் முன்னெடுக்கபட்டு வருகின்று. இதனால் சில தோட்டங்களின் தொழிற்சாலைகள் முடங்கி கிடக்கின்றன. தேயிலை கொழுந்துகள் அரைக்காமல் கிடக்கின்றன.  சில தொழிற்சாலைகளில் கள்ளதனமாக கொழுந்துகள் அரைக்கப்பட்டுள்ளன இதனால் முறுகள் நிலைகளும் தோன்றி உள்ளன.

இது இவ்வாறு இருக்க நேற்றைய தினம் (04.12.2018) இந்த போராட்டங்கள் முறையாக நடைபெற்றாலும் இன்று (05.12.2018) பல தோட்டங்களில்  தொழிலாளர்களின் ஒரு சாரார் வேலைக்கும்  ஒருசாரார் வேலைக்கு செல்லாமல் வீடுகளில் இருந்து தங்கள்  எதிர்ப்பை மேற்க் கொண்டு வருகின்றனர். வேலைக்கு செல்பவர்களிடமோ அல்லது வேலைக்கு செல்லாமல் விட்டில் இருப்பவர்களிடமோ கட்சிபாகுபாடுகள் இல்லை. இந் நிலை மலையத்தில் ஒரு குழப்ப நிலையை ஏற்படுத்தி உள்ளது. 

இந்த விடயம் தொடர்பில் வேலைக்கு செல்பவர்களிடம் வினவிய போது. 
நாங்கள் கடந்த நாட்களில் வேலை நிருத்தம் செய்ய சொன்ன வேலையில் வேலை நிறுத்தம் செய்தோம். ஆனால் இதுவரைக்கும் சம்பள உயர்வு இல்லை. மலையத்தில் உள்ள எல்லா தொமிற்சங்களுக்கும் நாம் மாதாந்தம் சந்தா பணம் கட்டுகின்றோம். எங்கள் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக தான் அவர்கள் சந்தாபணம் கட்டுகின்றோம் எனவே சந்தாபணம் வாங்குவது போல் ஒவ்வொருவரும் மாரிமாரி பந்து வீசாமல் சம்பளத்தை வாங்கி கொடுக்க நடிவடிக்கை எடுங்கள்.நாங்கள் வீட்டில் இருந்தால் எங்கள் பிள்ளைகளுக்கு யார் சாப்பாடு கொடுப்பது. ஜனவரி மாதம் பொங்களும் வரகின்றது. பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பவும் வேண்டும் ஒரு வீட்டில் இரண்டு மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர். உடுப்பு¸ சப்பாத்து¸ பாடசாலை உபகரணங்கள் வாங்கவும் வேண்டும் அதற்கும் பணம் வேண்டும். இம்முறை இலவச சீர் உடையும் இல்லை. நாங்கள் 25 வீத வேலைக்குச் சென்றால் தான் அட்வான்ஸ் கிடைக்கும் அது கிடைத்தால் தான் சம்பளம் கிடைக்கும் வரைக்கும் உணவு பொருட்களை கொள்வனவு செய்ய முடியும். அது மட்டுமா ஏனைய சுகாதாரம் போன்ற இன்னோரன்ன செலவுகள் இருக்கின்றன. இந் நிலையில் நாங்கள் விட்டில் இருந்தாள் எங்கள் நிலை என்னாவது. அரசியல் நிலையும் மோசமாக உள்ளது எங்கள் கோரிக்கைகளை எந்த அரசாங்கத்திடம் சொல்லுவது எனவே இதை உணர்ந்து செயற்பட வேண்டிய நிலைக்கு தள்ளபட்டுள்ளோம். கம்பனிகளுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் கொடுக்க முடியும். சில கம்பனிகள் தருவதாக கூறுகின்றன. சில கம்பனிகள் முடியாது என்ற நிலையின் காரணமாகவே தான் இந்த பிரச்சனை முடிவுக்கு வரவில்லை. அப்படி அவர்களுக்கு கம்பனியை செய்ய முடியாவிட்டால் எங்களிடம் தந்துவிட்டு போகச் சொல்லுங்கள் நாங்கள் செய்து காட்டுகின்றோம் என்று கூறினர்.

Post Bottom Ad

Responsive Ads Here