பொலிஸ் பரிசோதகரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் ரஹ்மான் மரணம் - THE MURASU

Dec 6, 2018

பொலிஸ் பரிசோதகரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் ரஹ்மான் மரணம்

யூ கே. காலித்தீன் -
பொலிஸ் பரிசோதகரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கலமுனைத் தொகுதி அமைப்பாளரும், திருகோணமலை உப்புவெளி பிரதேசத்தில் பொலிஸ் பிரதான பரிசோதகரான (IP) இஸட்.ஏ.எச்.றஹ்மான் வயது 54 நேற்று (05-12-2018) அதிகாலை ஓரு மணியளவில்  திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் அவர் உயிரிளந்துள்ளார்.

இவர் 1965.02.10ஆம் திகதி மருதமுனையில் பிறந்தார். இவர் மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் ஆவார். நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் மருதமுனையைச் சேர்ந்த மர்ஹும் அனுஸ்லெப்பை மரைக்கார் செயினுலாப்தீன், ஆதம்பாவா ஹபீபா உம்மா தம்பதியின்  மூத்த புதல்வராவார். 

இவர் 1988.01.18ஆம் திகதி உப பொலிஸ் பரிசோதகராக நியமனம் பெற்று வவுனியா பொலிஸ் நிலையத்தில் தனது கடமையைப் பொறுப்பேற்று தலைமன்னார், கல்முனைஆகிய பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றினார். கல்முனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய போது மட்டக்களப்பு மாவட்ட வெல்லாவெ பொலிஸ் பிரிவில் கடமையின் நிமிர்த்தம் சென்று கொண்டிருந்த போது பயங்கர வாதிகள் மறைந்திருந்த தாக்கிய போது மிகவும் சாதுரியமாக தன்னுடன் பயனித்த பொலிஸ் உத்தியோகத்தர்களையும், ஆயுதங்களையும், வாகனத்தையும்  பாதுகாத்தமைக்காக உயர் அதிகாரிகளின் பாராட்டைப்பெற்று 1990-04-27ஆம் திகதி பொலிஸ் பரிசோதகராகப் பதவி  உயர்வு பெற்றார்.

அந்தப் பதவி உயர்வுடன் பம்பலப்பிட்டி,கம்பள,மகவெல,அக்கறைப்பற்று, மருதானை,கல்முனை ஆகிய பொலிஸ் நிலையங்களிலும் கடமையாற்றினார். இறுதியாக கல்முனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய வேளை அரசியல் பழிவாங்கல்; காரணமாக கொழும்பு தலைமைக் காரியாலயத்திற்கு இடமாற்றம்செய்யப்பட்டார். அங்கு கடமையாற்றிய போது சம்பளமற்ற விடுமுறை கோரி விண்ணப்பித்த போது அந்த விண்ணப்பத்தை உயர்அதிகாரிகள் அங்கீகரித்து சிபாரிசு செய்திருந்தனர்.

இந்த நிலையில் அப்போது இருந்த பொலிஸ்மா அதிபர் அமரர் ராஜகுரு இவரது விண்ணப்பத்தை நிராகரித்து 1995.10.01ஆம் திகதி இவரைப் பதவியில் இருந்து நீக்கினார். அந்த அரசியல் பழிவாங்கல்  தொடர்பான கோவையை அப்போதே பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளருக்குச் சமர்ப்பித்திருந்தார்.
 
2001,2002ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசு இது தொடர்பாக விசாரணை நடாத்திக் கொண்டிருந்த வேளை ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா பண்டார நாயக்கா குமாரதுங்க ஆட்சியைக் கலைத்தார்.இதனால் இவர் எடுத்த முயற்ச்சிகள் கைகூடவில்லை.அதன் தொடர்ச்சியாக இன்றைய நல்லாட்சியில் இவரது கோவை பரிசிலனை செய்யப்பட்டு 23 வருடங்களின் பின்னர் மீண்டும் பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளர்

இவர் பொலிஸ் பரிசோதகராக நியமனம் செய்யப்பட்டு 2018-10-01ஆம் திங்கள்கிழமை திருகோணமலை மாவட்டத்தில் உள்ள உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் தனது கடமையைப் பொறுப்பேற்றார். என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here