ரணிலுக்கு பிரதமர் பதவியை வழங்குவதற்கு ஜனாதிபதி இணக்கம் - THE MURASU

Dec 13, 2018

ரணிலுக்கு பிரதமர் பதவியை வழங்குவதற்கு ஜனாதிபதி இணக்கம்

ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேன பிரதமர் பதவியை ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்குவதற்கு இணக்கம் தொிவித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொிவித்துள்ளார்கள்.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை அடுத்து ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேன ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

இதன் போது ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை வழங்குவதற்கு ஜனாதிபதி மறுப்புத் தொிவிக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாப்பா அபேவர்த்தன தொிவித்துள்ளார்.

பிரதமது பதவியை வழங்குவதற்கு சம்மதித்த போதிலும், ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசுவதற்கு விரும்பவில்லை. அவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கோபமாக உள்ளார் எனவும் அவர் தொிவித்தார். 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here