ஜனாதிபதி முழு மனதுடன் பதவிப்பிரமாணம் செய்து வைக்கவில்லை - ஐக்கிய தேசியக் கட்சி குற்றச்சாட்டு - THE MURASU

Dec 16, 2018

ஜனாதிபதி முழு மனதுடன் பதவிப்பிரமாணம் செய்து வைக்கவில்லை - ஐக்கிய தேசியக் கட்சி குற்றச்சாட்டு

50 நாள் போராட்டத்தின் பின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் ஜனாதிபதி முழு மனதுடன் பதவிப்பிரமாணம் செய்து வைக்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

சட்டரீதியான பிரதமர் நியமனத்தை அரச ஊடகங்கள் கூட நேரடியாக ஒளிபரப்பத் தவறிய அதேவேளை, பதவிப்பிரமான நிகழ்வுக்கு ஊடகங்களை அனுமதிக்கவும் ஜனாதிபதி மறுத்திருந்தார் என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

“ஜனாதிபதி முழு இணக்கப்பாட்டுடன் இந்நிகழ்வில் பங்கேற்கவில்லை. அவரால் மேலும் இடையூறுகள் தொடரும் என எதிர்பார்க்கின்றோம்.
ஐக்கிய தேசியக் கட்சி ஜனநாயக வழியில் செல்லும். சட்டரீதியான அரசு நிறுவப்பட்டதும் பொதுத் தேர்தலுக்குச் செல்லவும் நாம் தயார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று நண்பகல் நாட்டு மக்களுக்கு சிறப்பு உரையாற்றுவார்” என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேலும் தெரிவித்தனர்.

Post Bottom Ad

Responsive Ads Here