நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா கைது - THE MURASU

Dec 20, 2018

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா கைது

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
 
கடந்த 16ஆம் திகதி கொடக்கவெல நகரில் வைத்து நபர் ஒருவரை தாக்கியமைத் தொடர்பில் கொடக்கவெல பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைபாட்டுக்கு அமைய, ரஞ்சித் சொய்சா உள்ளிட்ட நால்வர் பொலிஸ் நிலையத்தில் முன்னிலையான போது, கைதுசெய்யபட்டு பெல்மடுல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில், சந்தேகநபர்களை அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


Post Bottom Ad

Responsive Ads Here