ரணில் விக்ரமசிங்க இன்று 5 ஆவது தடவையாகவும் பிரதமராக பதவியேற்றார் - THE MURASU

Dec 16, 2018

ரணில் விக்ரமசிங்க இன்று 5 ஆவது தடவையாகவும் பிரதமராக பதவியேற்றார்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று 5 ஆவது தடவையாகவும் பிரதமராக பதவியேற்றார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் 11.16 மணி சுபவேளையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து ரணில் விக்ரமசிங்க பிரதமராகப் பதவியேற்றார்.

1993ஆம் ஆண்டு முதல் முறையாகவும், 2001ஆம் ஆண்டு இரண்டாவது முறையாகவும், 2015ஆம் ஆண்டு ஜனவரியில் மூன்றாவது முறையாகவும், 2015 ஓகஸ்ட் மாதம் நான்காவது முறையாகவும், தற்போது, ஐந்தாவது முறையாகவும் அவர் பிரதமர் பதவியை ஏற்றார்.

இதன்மூலம் நாட்டில் கடந்த 51 நாள்களாக நீடித்த அரசியல் நெருக்கடி நிலை முடிவுக்குக் கொண்டுவரப்படும் என நம்பப்படுகிறது.
ரணில் விக்கிரமசிங்கவின் பதவியேற்பு நிகழ்வுக்கு ஊடகங்கள் அனுமதிக்கப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்திருந்த நிலையிலும் ஜனாதிபதி செயலகத்தில் அனுமதிமறுக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here