11 சதவீதத்தால் இலங்கைத் தேயிலையின் விலை வீழ்ச்சி - THE MURASU

Dec 21, 2018

11 சதவீதத்தால் இலங்கைத் தேயிலையின் விலை வீழ்ச்சி

11 சதவீதத்தால் இலங்கைத் தேயிலையின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. தொடர்ச்சியாக இலங்கைத் தேயிலையின் விலை வீழ்ச்சி கண்டு வருவதாக தேயிலை தரகர் நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த வருடம் இந்த காலப்பகுதியில் இலங்கைத் தேயிலையின் விலை 610 ரூபா 28 சதமாக இருந்தது. நேற்று 536 ரூபா 69 சதமாக பதிவாகி உள்ளது. இது 11 சதவீத விலை வீழ்ச்சியாகும்.

மேலும் தேயிலை ஏற்றுமதி பெறுமதி 7 சதவீதத்தால் வீழ்ச்சி அடைந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு இந்தக் காலப்பகுதியில் 63 பில்லியன் ரூபாய் பெறுமதியான தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டபோதும், இந்த முறை 58.7 பில்லியன் ரூபாய் பெறுமதியான தேயிலையே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. என தேயிலைத் தரகு நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here