கல்முனை நகரை ஒளியூட்ட நடவடிக்கை: ரூபா இலட்சம் பெறுமதியான LED மின்குமிழ்கள் அன்பளிப்பு - THE MURASU

Oct 21, 2018

கல்முனை நகரை ஒளியூட்ட நடவடிக்கை: ரூபா இலட்சம் பெறுமதியான LED மின்குமிழ்கள் அன்பளிப்பு

(அஸ்லம் எஸ்.மௌலானா)
கல்முனை நகர பஸார் சுற்றுவட்ட பிரதேசத்தை ஒளியூட்டி அழகுபடுத்தும் பொருட்டு பிரதி அமைச்சர் ஹரிஸ் அவர்களின் சகோதரரும் பிரபல தொழிலதிபருமான எச்.எம்.எம் அமீர் அலி அவர்கள் 16 இலட்சம் ரூபா பெறுமதியான LED மின்குமிழ்களை கல்முனை மாநகர சபைக்கு அன்பளிப்பு செய்துள்ளார்.

இவற்றை இன்று சனிக்கிழமை அவர் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம் றகீப் அவர்களிடம் கையளித்தார்.

அரச தொழில் முயற்சி கண்டி நகர அபிவிருத்தி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் முன்னிலையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் கல்முனைத் தொகுதி முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here