பொதுச் சிரமதானத்திற்கான அழைப்பு - THE MURASU

Sep 14, 2018

பொதுச் சிரமதானத்திற்கான அழைப்பு

- யூ.கே. காலித்தீன் -
சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை தற்போது பல்வேறு வழிகளில் முன்னேற்றம் அடைந்து வருவது அனைவரும் அறிந்த விடயமே. நோயாளிகளின் வரவிலும், பௌதீக தேவைகளை நிறைவு செய்வதிலும் நாளாந்தம் முன்னேற்றம் அடைந்து வருகின்றமை குறிப்பிட்டுக் கூறக்கூடிய விடயமாகும். எமது வைத்தியசாலைக்கு வருகை தருகின்றவர்களுக்கு சிறப்பான, சுத்தமான சுற்றுச் சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது.
மேற்படி சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு மாபெரும் சிரமதானத்தினை எதிர்வரும் 2018.09.16ம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) முழு நாள் நிகழ்வாக காலை 06.00 மணியிலிருந்து நடாத்த வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கத்தினால் ஏற்பாடு செய்ய்யப்பட்டுள்ளது.
இச்சிரமதான நிகழ்வில் கலந்துகொண்டு வைத்திசாலை அபிவிருத்தியில் பங்களிப்புச் செய்ய வருமாறு சாய்ந்தமருதில் உள்ள இளைஞர்கள், பொதுமக்கள், நலன்விரும்பிகள், புத்திஜீவிகள் அனைவரையும் தனிப்பட்ட ரீதியாகவும் அமைப்பு ரீதியாகவும் அன்புடன் அழைக்கின்றோம். குறிப்பாக மேசன், தச்சு, குழாய் பொருத்து, மின்னினைப்பு, நிறப்பூச்சு பணிகளில் ஈடுபடும் சகோதரர்களின் உதவிகள் மிகவும் எதிர்பார்க்கப்படுவதால் இத்துறைகளில் ஈடுபடுவோரையும் விஷேடமாக எதிர்பார்க்கின்றது.
செயலாளர்
வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கம்
பிரதேச வைத்தியசாலை, சாய்ந்தமருது.
Best Regards,
UK. Kalideen JP (Whole Island)
Journalist
214, Munthiriyady Rd
Sainthamaruthu 12
+94 779203839

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here