பிரதி அமைச்சர் ஹரீஸின் ஏற்பாட்டில் நடைபெற்ற தலைவர் அஷ்ரஃப் நினைவு தின நிகழ்வு. - THE MURASU

Sep 17, 2018

பிரதி அமைச்சர் ஹரீஸின் ஏற்பாட்டில் நடைபெற்ற தலைவர் அஷ்ரஃப் நினைவு தின நிகழ்வு.

(அகமட் எஸ். முகைடீன்)
மறைந்த பெருந் தலைவர் அஷ்ரஃப் அவர்களின் 18 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு கத்தமுல் குர்ஆனும் துஆப் பிரார்த்தனையும் இன்று (16) ஞாயிற்றுக்கிழமை காலை மருதமுனை அந்-நஹ்ழா அரபுக் கல்லூரியில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான சட்டமுதுமானி ரவூப் ஹக்கீம், கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.ஏம். றகீப், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், கல்முனை மாநகர சபை உறுப்பினரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரின் இணைப்புச் செயலாளருமான ரஹ்மத் மன்சூர், அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா, அந்-நஹ்ழா அரபுக் கல்லூரியின் அதிபர் ஏ. அபூ உபைதா (மதனி), அக்கல்லுரியின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். பதுருதீன், உள்ளிட்ட அரபுக் கல்லூரியின் உஸ்தாத்மார்கள், மாணவர்கள் மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், கட்சிப் போராளிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது மறைந்த பெருந் தலைவர் அஷ்ரஃப் அவர்களின் மறுமைவாழ்வின் ஈடேற்றத்திற்காக விஷேட துஆப் பிரார்த்தனை நடைபெற்றது.


 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here