தம்பலகாமத்தில் தங்க மழை - THE MURASU

Aug 9, 2018

தம்பலகாமத்தில் தங்க மழை

கிண்ணியா - கொழும்பு பிரதான வீதியின் தம்பலகாம் ஊடாக செல்லும் கிண்ணியா - தம்பலகாமம் எல்லையின் பிரதான வீதியில் இன்று விசித்திர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று பிற்பகல் குறித்த பகுதியினூடாக சென்ற வானில் இருந்து சிலர் வட்ட வடிவான, முத்து போன்ற, தங்க நிறத்தினாலான சிறிய பொருட்களை வீதியில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.

வானிலிருந்து விழுந்த இந்த தங்க நிறத்தினாலான முத்துக்கள் மழைத்துளி போல் வீதியின் சகல இடங்களிலும் சிதறிக்காணப்பட்டுள்ளது.

இதை எடுத்த சில இளைஞர்கள் தங்கமா என்று பரிசோதிப்பதற்காக நகைக்கடைக்கு கொண்டு சென்ற போது அது தங்கம் என உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அத்துடன் அவை பழைய காலத்து தங்கமாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

இதனையடுத்து இதையறிந்த பாதசாரிகளும். அப்பகுதி மக்களும் வீசிச் சென்ற தங்கத்தை சேகரிப்பதற்காக வீதியில் குவிந்து தேடுதல் நடத்தி தங்கம் சேகரித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here