ஜனாஸாவும் - பொய் பித்தலாட்டமும் - பாகம் - 02 - THE MURASU

Aug 9, 2018

ஜனாஸாவும் - பொய் பித்தலாட்டமும் - பாகம் - 02

நிந்தவூர் ஜனாஸா நலன்புரி சங்கம்
 (உருவாக்கம் - 2017 - 2வருடங்கள்)
நிந்தவூரின் மையவாடிகளை சுத்தமாகவும். ஒழங்கமைப்புடனும் வைத்திருக்க வோண்டும் என்ற சிந்தனைய உருவாக்கி செயற்படுத்தி காட்டியவர் மரணமடைந்த சகோதரர் றபாய்த்தீன் அவர்களாகும். அல்லாஹ் அவரது கப்ரை விசாலப்படுத்துவானாக.

அவரது தலைமையில் சில சகோதரர்களின் ஒத்துழைப்புடன் பிர்தௌஸ் மையவாடியை சுற்றி மதில் அமைத்து. அறை அமைத்து. ஒழங்கு முறையில் அடக்கம் செய்யும் வழி முறையை முன்வைத்தார்.
அதன் பிற்பாடு றவாஹா மையவாடி. ரஹ்மானிய  மத்திய மையவாடி, முத்தகீன் மையவாடி, அட்டப்பள மையவாடிகளை சூழவுள்ள சகோதரர்கள் ஒன்றினைந்து மேற்படி செயற்பாட்டை முடிந்தளவு  செய்தார்கள். இதற்க்கு பக்க உதவியாக தற்போதய பிரதேச சபை தவிசாளரும். ஆரிப் சம்சுத்தீனும் உதவினார்கள்,
மையவாடிகளின் பௌதீக வேலைப்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்ட முறைகளும் நிதி ஒதுக்கீடுகளும்,

01. சுற்று மதில் அமைத்தல்
றவாஹா மையவாடி. மைத்திய மையவாடி, முத்தகீன் மையவாடி - பிரதேச சபையின் மேற்பார்வையில் பாராளுமன்ற உறுப்பினர். அதாவுல்லா - தொகை.சுள.6,000,000.00(அறுபது இலட்சம்) நிதியுதவியுடன் அமைக்கப்பட்டது..
பிர்தௌஸ் மையவாடியை - சகோதரர் றபாய்த்தீன் - நிதி நன்கொடை - ஊர் மக்கள்
02. பொது அறை
றவாஹா மையவாடி. மத்திய மையவாடி, முத்தகீன் மையவாடி - பிரதேச சபையின் நிதி ஒதுக்கீடு மற்றும் மேற்பார்வையில் -  பிரதேச சபையினால் செய்யப்பட்ட கட்டப்பட்டது.
03. மின்சாரம். நீர் வசதி - சகல மையவாடிகளுக்கும் - பிரதேச சபையினால் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு சகல முக்கிய தேவைப்பாடுகளும் பிரதேச சபையினால்  2015 க்கு முன்பு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

மையவாடி சிரமதானம்
எமது மையவாடிகளின் சிரமதானம் காலா காலமாக பல்வேறு விளையாட்டு கழகங்கள் , சமூக சேவை அமைப்புகள் என்பனவற்றினால் செய்யட்டு வந்துள்ளது. குறிப்பாக மையவாடிகளை ஒழுங்கமைப்பு செய்ய வேண்டும் என்ற சிந்தனையுடன் 2014 ம் ஆண்டு நிந்தவூர் உலமா சபை நிந்தவூரிலுள்ள பல அமைப்புகளின் ஒத்துழைப்புடன் மேற் கொண்ட சிரமதானம் குறிப்பிடத்தக்கது. இதற்க்கு இஸ்வா அமைப்பு அனைத்து செலவுகளையும் பொறுப்பெற்றுக்கொண்டது.  கழகங்களில் லகான். கெண்ட். சென்டஸ். இம்ரான் போன்றவற்றை குறிப்பிடலாம்.

மையவாடிகளை சூழ மதில் அமைத்தாச்சி. றூம் கட்டியாச்சி. தண்ணீர் எடுத்தாச்சி. உள்பாதை போட்டாச்சி. பேகஸ் பல்ப் வயர் கெடுத்தாச்சி, மைக்கும் வழங்கியாச்சி , மையத்துகளை ஒழுங்காக அடக்கும் முறையையும் உலமா சபையும். றபாய்த்தீன் பிரதரும் அறிமுகப்படுத்தியாச்சி .................
அப்படியாயின் நிந்தவூர் ஜனாஸா நலன்புரி சங்கம் எதனை செய்தது.?
எல்லா வோலைகளுக்கும் பெயர் வைக்க போனார்களா? அல்லது வேறு தேவைகளுக்கு பயன்படுத்த அப்பெயர் தேவைப்பட்டதா?
98 வீத மையவாடி செயற்பாடுகள் முடிந்து விட்டது. மிகுதி 2மூ வோலைப்பாடுகளை மாத்திரம் நிந்தவூர் ஜனாஸா நலன்புரி சங்கம் செய்து முடித்தது. அதாவது பிரதேச சபை செயலாளரின் கீழ் இயங்கிய போது
01. சில அறைகளை 3 அல்லது 4 அடிகளுக்கு விஸ்திரணம் செய்தது. (இது பிரதேச சபை செய்ய வேண்டியது)
02. தனியாக இயங்கிய மையவாடி பராமரிப்பு குழுக்களை ஒன்றினைத்தது,
03. மற்றும் அடக்கம் செய்வதற்க்கான ஒழுங்கமைப்பு . ஓலி. ஓளி வசதிகளை ஏற்படுத்தல்.
04. மையத்து வீட்டிக்கு கதிரை ஏற்பாடு செய்தல்.
இவ்வாறான மரணித்த ஜனாஸாவை அடக்கம் செய்ய உதவுதலாகும். ஜனாஸாக்களை வைத்தியசாலையில் இருந்து கொண்டு வரும் சேவை செவ்வனே இஸ்வா அமைப்பின் பராமரிப்பிலுள்ள ஜனாஸா வாகன சேவை செய்ய.  ஜனாஸா சங்கம் அடக்குவதற்க்கு உதவியது. இவ்வாறு இருக்க ஏன்  இஸ்வா அமைப்பின் பராமரிப்பிலுள்ள ஜனாஸா வாகன சேவைக்கும் ஜனாஸா நலன்புரி சங்கத்திற்க்கும் இடையில் ஏன் முரண்பாடு ஏற்பட்டது. நான் அறிந்த வகையில் பின்வரும் உறுதியாக முன்வைக்கிறேன்.

01.  தனியான வாகனம் வாங்க ஜனாஸா சங்கம் முயற்ச்சித்தமை.
நிந்தவூரில் ஜனாஸா வாகனம் ஒன்று சீராக சேவையில் இயகும் நிலையில் நிந்தவூர் பெரிய பள்ளிவாசல் மற்றும்  இஸ்வா அமைப்பிடம் கலந்து ஆலோசனை  செய்யாமல்  தனக்கென தனியான வாகனம் ஒன்றை வாங்க ஜனாஸா சங்கம்  நிதி அறவிட்டமை.
02. இஸ்வா அமைப்பின் பராமரிப்பிலுள்ள ஜனாஸா வாகன சேவைக்கும் எதிராக பொய்யான பிரச்சாரம் செய்தமை.
03. ஜனாஸா சங்கம் மார்க்கத்திற்க்கு முரணான செயற்பாடுகளை செய்ய முற்பட்டமையை இஸ்வா அமைப்பு தட்டிக் கேட்டமை.
01. மையவாடிகளை பூஞ்சோலையாக மாற்றல் - இதனை அகில இலங்கை உலமா சபை கூடாது என பத்வா வழங்கியது,
02. மையத்துகளை வீடுகளிலிருந்து மையவாடிகளுக்கு மணிதன் தூக்குவதற்க்கு பதிலாக வாகனத்தில் கொண்டு செல்லல், - பத்வாவுக்கு அனுப்பட்டுள்ளது.

04. தேவைகளுக்கு அதிகமான மக்களிடம் நிதி அறவிடப்படல்,
எல்லா மையவாடிகளுக்கும் 80 கதிரை வீதமும் குளிப்பாட்டும் தட்டமும். தனியான பல்ப் வசதிகள் மண்வெட்டிகள் என எல்லாம் வாங்கிய பின் ஏன் ஜனாஸா சங்கம் வங்கி (ளவயனெiபெ ழசனநச) கட்டனை மூலம் மாதா மாதம் மக்களின் பணத்தை அறவிட்டமையும் இது வரையும் வரவு செலவு கணக்கறிக்கை மக்களுக்கு வெளிப்படுத்தப்படாமையும்.
மாதாந்த வங்கி வரவு
01. மக்கள் வங்கி      - ரூபா. 63000.00 (கிட்டதட்ட)
02. இலங்கை  வங்கி  - ரூபா. 67000.00 (கிட்டதட்ட)
03. அமானா வங்கி      - ரூபா. 62000.00 (கிட்டதட்ட)    
04. HNB வங்கி      - ரூபா. 29000.00 (கிட்டதட்ட)
மொத்தமாக மாதாந்தம் ரூபா. 240,000.00 (இரண்டு லட்சத்து நாற்பது ஆயிரம் மட்டும் )
குறிப்பு - இப்பணம் எதற்க்கு செலவு செய்யப்படுகிறது. ? இது வரையும் ஏன் வரவு செலவு கணக்கறிக்கை மக்களுக்கு வெளிப்படுத்தப்படவில்லை.?
(குறிப்பு - இத்தகவல்கள் தனி நபர் விசாரிப்பு. ஜனாஸா சங்க உறுப்பினர்களின் வாக்கு மூலம். ஜனாஸா அமைப்பின் துண்டுப்பிரசுரம். குயஉநடிழழம யிலிருந்து பெறப்பட்டவையாகும்).
தொடரும்......

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here