பாடசாலையில் அதிபர் பாலியல் உறவு - THE MURASU

Jun 13, 2018

பாடசாலையில் அதிபர் பாலியல் உறவு

கம்பஹா மாவட்ட கல்வி வலயத்துக்கு உட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் ஆண் அதிபர் ஒருவரும் பெண் உப அதிபர் ஒருவரும் பாடசாலையில் உள்ள அறை ஒன்றில் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளனர். இதனை நேரில் கண்ட மாணவன் ஒருவனை அதிபர் பழிவாங்கியுள்ளதாகவும் பாடசாலைக்கு அதிபருக்கு எதிரான விசாரணைகளை முடக்க அரசியல்வாதி ஒருவர் துணைபோயுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. (gampaha school principal incident)
சம்பவம் தொடர்பில் தெரிய வருதாவது.
கம்பஹா மாவட்ட கல்வி வலயத்துக்கு உட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவரும் பெண் உப அதிபரும் பாடசாலையில் உள்ள அறை ஒன்றில் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளனர்.
11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் வெண்கட்டி எடுக்கச் சென்ற போது பாடசாலை அதிபரும் பெண் உப அதிபரும் பாலியல் உறவில் ஈடுபடுவதை நேரில் கண்டுள்ளான்.
இதனையடுத்து தனது சக நண்பர்களுக்கு தான் பார்த்த சம்வத்தை கூறியுள்ளான்.
இந்த விடயம் பாடசாலை முழுவதும் பரவியுள்ளது.
இதனையடுத்து பாடசாலை அதிபர் குறித்த மாணவனை அழைத்து சம்பவம் தொடர்பில் யாருக்கும் கூற கூடாது என அச்சுறுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து கம்பஹா மாகாண கல்வி அலுவலக குறித்த மாணவன் முறைப்பாடு செய்துள்ளான்.
அந்த முறைப்பாட்டில்,
குறித்த மாணவன் முதலாம் தரம் தொடக்கம் 11ஆம் தரம் வரை அதே பாடசாலையில் கல்வி கற்றுள்ளதுடன் மாவட்ட மற்றும் மாகாண விளையாட்டு போட்டிகளில் பங்குபற்றி பல முதலிடங்களையும் பெற்றுள்ளான்.
இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு பின்னர் எல்லா விடயத்திலும் தன்மீது அதிபரும், உப அதிபரும் குறை கூறுவதாகவும் மாணவன் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளான்.
தனது தலை முடி அதிகமாக உள்ளது என கூறி தன்னை பிரதி அதிபர் தாக்கியதாகவும் அதனை தான் தனது கையினால் தடுத்ததாகவும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து இரு பொலிஸார் எனது பாடசாலைக்கு வந்து என்னை விசாரணை செய்தனர். நான் அந்த குற்றச்சாட்டை மறுத்ததோடு பாடசாலையில் உள்ள சி.சி.டி.வி. கமராக்களை ஆராய்ந்து பார்க்குமாறு கூறினேன்.
சில நாட்களில் என்னை பாடசாலையை விட்டு விலக்கினார்கள். வலைய கல்வி அதிபரிடமும், மாகாண கல்வி அதிபரிடமும் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய எனக்கு வேறு ஒரு பாடசாலையில் கல்வி கற்க அனுமதி வழங்கப்பட்டது.
இந்த சம்பவம் எனக்கு பாரிய மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறையிட்ட போதும் அரசியல்வாதி ஒருவரின் தலையீட்டால் விசாரணைகளை முக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மாகாண கல்வி இயக்குனர் ஸ்ரீலால் நோனிஸிடம் வினவிய போது,
இந்த சம்பவம் தொடர்பில் தனக்கு ஞாபகம் இல்லை என தெரிவித்துள்ளார்.
இதேவேளை கம்பஹா வலைய கல்வி அதிபரிடம் வினவிய போது, பாடசாலையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் அடிப்பிடையில் பெண் பிரதி அதிபரை இப்பாடசாலையை விட்டு விலக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும் அரசியல் தலையீட்டால் அதனை செயற்படுத்த முடியாமல் இருக்கின்றது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here