கிரி வெஹர ரஜமகா விகாரையில் துப்பாக்கி சூடு! விகாராதிபதி படுகாயம் - THE MURASU

Jun 13, 2018

கிரி வெஹர ரஜமகா விகாரையில் துப்பாக்கி சூடு! விகாராதிபதி படுகாயம்

கதிர்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரி வெஹர ரஜமகா விகாரையில் மகாசென் தேவஸ்தான உரித்துப் பிரச்சினை காரணமாகவே துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். (Kataragama gunfire Reason releasing)
கிரிவெஹர ராஜ மகா விகாரையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் படுகாயமடைந்த விகாரையின் விகாராதிபதி கோபாவாக தம்மிந்த தேரர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலை உறுதி செய்துள்ளது.

இனந்தெரியாத நபர்களே இந்த துப்பாக்கிச்சூட்டுப் பிரயோகத்தை மேற்கொண்டதாகவும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுவருவதுடன், மேலதிக விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here