நிந்தவூரில் அரசிற்கு சொந்தமான சதுப்பு நிலத்தை அபகரிக்க முயற்சித்தவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். - THE MURASU

May 16, 2018

நிந்தவூரில் அரசிற்கு சொந்தமான சதுப்பு நிலத்தை அபகரிக்க முயற்சித்தவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

(றியாஸ் இஸ்மாயில்)
நிந்தவூர் பிரதேச செயலகப்பிரிவில்  மாட்டுப்பள்ள கடற்கரை வட்டை வீதியின் பின்பகுதியிலுள்ள கரையோர வலயத்திற்குட்பட்ட அரசிற்கு சொந்தமான சதுப்பு நிலத்தை நேற்று முன்தினம் (15.05.2018) தனியார்களால் மண்ணிட்டு நிரப்பும் போது கரையோரம் பேணல் மற்றும் காரையோர மூலவள முகாமைத்துவத் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எம்.ஐ.எம்.ஜசூர் தலைமையில் கரையோரப் பாதுகாப்பு உத்தியோகத்தர் கே.அறுனேன் குழுவினர் அங்கு விஜயம் செய்து நடவடிக்கைகளை மேற்கொண்டதன் விளைவாக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் உபபொலிஸ் பரிசோதகர் ரத்ணாயக்கா தலைமையிலான பொலிசார் மண் நிரப்பியவர்களை கைது செய்ததுடன், பயன்படுத்திய வாகனங்களையும் கைப்பற்றிக் கொண்டார்கள்.

இது விடயமாக காரையோரம் பேணல் மற்றும் காரையோர மூலவள முகாமைத்துவத் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எம்.ஐ.எம்.ஜசூர் தெரிவிக்கையில் 

நேற்று முன்தினம் தொலைபேசியின் மூலமாக குறிப்பிட்ட சதுப்பு நிலத்தை தனியார் இருவர் மண்ணிட்டு நிரப்புவதாக தகவல்கள் கிடைத்தன. நான் உடனடியாக அவ்விடம் சென்று மண்ணிட்டு நிரப்புவதை நிறுத்தி சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்திற்கும், கல்முனை துறைநீலாவணை விசேட அதிரடிப்படையினருக்கும், அக்கரைப்பற்று வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் அம்பாறை மாவட்ட மத்திய  சுற்றாடல் அதிகார சபை போன்றவர்களுக்கு அறிவித்ததேன். உடனடியாக பொலிசாரும் விசேட அதிரடிப்படையினரும் வருகை தந்து நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அரசுக்கு சொந்தமான சதுப்பு நிலத்தில் உள்ள கண்டல் தாவரங்களை அழித்து அவ்விடத்தில் மண்ணிட்டு நிரப்பி தனது காணிகளாக மாற்ற முற்பட்ட நிந்தவூர் மற்றும் சாய்ந்தமருதைச் சேர்ந்த இருவரையும் கைது செய்ததுடன், அவர்கள் பயன்படுத்திய 4 கனரக வாகனங்கள் ஒரு ஜே.சி.பீ. வாகனம் போன்றவற்றையும் சம்மாந்துறைப் பொலிசார் கைப்பற்றினார்கள்.

இதே வேளை குறிப்பிட்ட நபர்கள் சதுப்பு நிலத்தில் ஒருவர் வடக்கு தெற்காக 212 அடியும் மேற்கு கிழக்காக 291 அடியும் மற்ற நபர் வடக்கு தெற்காக 184 அடியும் மேற்கு கிழக்காக 140 அடியும் பெறமுயற்சி செய்த போதே கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இதுபற்றி அக்கரைப்பற்று வனஜீவராசிகள் திணைக்களத்திற்கும் அம்பாறை மாவட்ட மத்திய  சுற்றாடல் அதிகார சபைக்கு நேற்று முன்தினம் காலை 10.00 மணிக்கு அறிவித்தும் குறிப்பிட்ட இடத்திற்கு அதிகாரிகள் வருகைதராமல் வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஒரு உத்தியோகத்தர் மதியம் 2.00 மணியளவில் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்து என்னிடம் விடயங்களை கேட்டறிந்து கொண்டாரகள்;. அம்பாறை மாவட்ட மத்திய  சுற்றாடல் அதிகார சபை இது விடயமாக எந்த தொடர்புகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எம்.ஐ.எம்.ஜசூர் மேலும் தெரிவித்தார்.

காரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவத் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எம்.ஐ.எம்.ஜசூர் இது விடயமாக இன்று (16) மாலை  தெரிவிக்கையில், சம்மாந்துறைப் பொலிசார் துரிதமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு இன்று(16) காலை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.பின்னர் குறிப்பிட்ட நபர்கள் இருவரும் தலா ரூபா 5000.00 தண்டப்பணம் விதிக்கப்பட்டும் கனரக வாகனம் நான்கும் தலா ரூபா 5000.00 தண்டப்பணம் செலுத்தியும் இவர்கள் எச்சரிக்கை செய்து விடுதலை செய்யப்பட்டனர்.ஜே.சீ.பீ.றைவரை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் ஒப்படைக்குமாறும் குறிப்பிட்ட இடத்தில் நிரப்பப்பட்ட மண்ணை அகற்றுமாறும் கட்டளையிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here