• Latest News

  Nov 21, 2016

  கருப்பை வெள்ளையாக்கும் அமித்ஷா அலுலகம் வீடியோ ஆதாரத்துடன் அம்பலபடுத்துவேன் – வைரலாகும் கடிதம்

  நரேந்திர மோடி ரூ 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவிப்பதற்கு முன்பு 37 சதவிகித கமிஷன் அடிப்படையில் கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுக்களை மாற்றும் வேலையில் பாஜக தலைவர் அமித்ஷா அலுவலக ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். அதற்கான வீடியோ ஆதாரம் என்னிடம் இருக்கிறது. இதனை விரைவில் வெளியிடுவேன் என்று நரேந்திரமோடி குஜராத் முதல்வராக இருந்த போது அவருடன் மிகவும் நெருக்கமாக இருந்த பாஜகவின் முன்னாள் எம்எல்ஏ எழுதியிருக்கும் கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த கடிதத்தின் முழுவிபரத்தையும்
  குஜராத் மாநிலத்தை சேர்ந்த முன்னாள் பாஜக எம்.எல்.ஏ யாதின் ஓஸ். இவர்  நரேந்திர மோடி குஜராத்தின் முதலமைச்சராக இருந்த போது அவருக்கு நெருக்கமான நபராக இருந்தவர்.  கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை மாத ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து செயல்பட்டு வருகிறார் ஆன யாதின் ஓஸ். மோடி   ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு நாட்டு மக்களை முட்டாளாக்கும் முயற்சி என நவம்பர் 15ம் தேதியில் ஒரு கடிதத்தை மோடிக்கு எழுதியிருக்கிறார். அந்த  கடிதத்தின் உள்ளடக்கம் பின் வருமாறு,
  நவ.8 . 2016 அன்று ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற உங்களின் அறிவிப்பை கேட்ட நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். உங்களது இந்த துணிவு மிக்க வரலாற்று செயலை மிகவும் பாராட்டினேன். ஆனால் அந்த மகிழ்ச்சியான தருணம் சிறிது நேரத்தில் முடிந்துவிட்டது. நவ.9 ஆம் தேதி காலை எனக்கு வேண்டப்பட்ட சிலர் , நவ. 8 ஆம் தேதி பகல் 12 மணியளவில் , அகமதாபாத்தை சேர்ந்து பிரபல தொழிலதிபர் ஒருவரின் மனைவி , அப்பகுதியில் உள்ள பிரபலமான நகைக்கடை ஒன்றில் ரூ.20 கோடிக்கு தங்கம் வாங்கியுள்ளார். ரூ.20 கோடிக்கான தங்கம் ஏற்கனவே முன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் , பணத்தையும் தங்கத்தையும் மாற்றிக் கொள்ள அவர்களுக்கு வெறும் 2 நிமிடங்களே தேவைப்பட்டன. ஆனால் மிக புகழ்பெற்ற மருத்துவரான அவர் தற்செயலாக ரூ.5 லட்சத்திற்கு நகை வாங்கினார் என கூறினார்.
  முன் ஒரு காலத்தில் நான் உங்களுடன் ஒன்றாக பணியாற்றினேன்.அந்த அனுபவத்தை வைத்து நான் யோசித்த போது, ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பிற்கு முன்னதாகவே 50% கறுப்பு பணத்தை கட்டுப்படுத்தும் உங்களுக்கு நெருக்கமான தொழில் அதிபர்களுக்கு இது முன்னதாக தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.இது குறித்து ஒரு நாள் முழுவதும் நான் நடத்திய விசாரணையில் , கறுப்பு பணத்தை ஒழிப்பதற்கு என கூறி இப்படி ஒரு அதிரடியான அறிவிப்பின் பின்னால் மக்களை முட்டாள்கள் ஆக்குவது என்ற நோக்கம் உள்ளது என தெரிந்து அதிர்ச்சியடைந்தேன்.
  உங்களின் இந்த அதிரடி நடவடிக்கை , நாட்டின் நலன் கருதி எடுக்கப்பட்டது என்ற பெயரில் , உங்களுக்கு நெருக்கமானவர்கள், உங்கள் கட்சி மற்றும் கட்சியினரை மட்டுமே வளப்படுத்தும் நடவடிக்கை என்பது தெளிவாக புரிகிறது. நவ.8 ஆம் தேதி முதல் இன்று வரை திரு.அமித்ஷாவும் அவருக்கு நெருக்கமானவர்களும் பண மாற்று பரிவர்த்தனையில் மிக மும்மரமாக ஈடுபட்டு வருகிறார்கள் என்பதற்கான , வழுவான ஆதாரமாக விளங்கும் வீடியோ பதிவு என்னிடம் உள்ளது.
  அவரது வீடு மற்றும் அலுவலகத்திற்கு முன்னால் கறுப்பு பணத்தை வைத்திருப்பவர்கள் மிகப் பெரிய வரிசையில் , தங்களிடம் உள்ள கறுப்பு பணத்தை 37 % தள்ளுபடி விலையில் மாற்றுவதற்காக நின்று கொண்டிருக்கிறார்கள். அங்கு சுமார் ரூ.1 கோடி அளவிற்கு பணம் கொண்டு வரும் நபர்களுக்கு எந்த விதமான அடையாளமும் தேவையில்லை. அமித்ஷாவின் அலுவலக ஊழியர்கள் பணத்தை எண்ணி அதற்கு மாற்றாக ரூ.63 லட்சம் செல்லுபடியாகும் பணமாக தருகிறார்கள். நான் எளிதாக என்னிடம் உள்ள வீடியோவை வெளியிட முடியும். ஆனால் உங்களைப் பற்றி நான் நன்கு அறிவேன் , இத்தகைய செயல்களை புரியும் அமித்சாவிற்கு நெருங்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக கறுப்பு பணத்தை மாற்ற வரிசையில் நிற்பவர்கள் மீது நீங்கள் நடவடிக்கை எடுப்பீர்கள் என்று.
  என்னிடம் உள்ள வீடியோ பதிவை நான் இரண்டு மூன்று மூத்த பத்திரிக்கையாளர்களிடம் காண்பிக்க உள்ளேன். பின்னர் இது குறித்து உங்களுக்கு தெரியப்படுத்துவேன். நீங்கள் வீடியோ பதிவை பரிசோதித்துவிட்டு எனது அறிக்கையில் உள்ள உண்மைத்தன்மையை பத்திரிக்கையாளர்களை வைத்து சரி பார்த்து கொள்ளலாம்.
  பெரிய விதமான முறைகேடுகள் மற்றும் சட்ட விரோதமான செயல்கள் அதிகளவில் மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் தான் நடைபெறுகிறது என உங்களுக்கு வந்த தகவலை அடுத்து மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் பணம் மாற்றுவதை தடை செய்துவிட்டீர்கள் என்ற விஷயத்தை உங்களை நன்கு அறிந்தவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஆனால் உங்களின் அறிவு திறன், புத்தி கூர்மையை உங்களின் எதிரி கூட மதிக்கிறார்கள். ஆனால் ஒன்று மட்டும் நான் உறுதிப்படுத்துகிறேன், இப்படி ஒரு முக்கியமான நடவடிக்கையை நடைமுறைப்படுத்துவதும், அதன் பின்விளைவு குறித்தும் கண்டிப்பாக யோசிக்காமல் செய்யமாட்டீர்கள். நான் குஜராத்தை பற்றி நன்கு தெரிந்தவன் என்ற முறையில் இந்த கருத்தை பணிவுடன் பதிவு செய்கிறேன். ஏன் என்றால் , குஜராத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளும் பாஜக கட்சியினர் கீழ் இயங்கி வருகிறது. இந்த வங்கிகள் தான் நவ.8 ஆம் தேதி இரவு 9 மணிமுதல் நவ.9 ஆம் தேதி காலை 5 மணி வரை ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளுக்கு பதிலாக செல்லுபடியாகும் சிறிய மதிப்பிலான பணமாக மாற்றி தந்தனர். அனைத்து வங்கிகளிலும் நவ. 8 ஆம் தேதி அன்று எவ்வளவு செல்லுபடியாகும் சிறிய மதிப்பிலான பணம் இருந்தது என்பதை ரிசர்வ் வங்கியின் உதவியுடன் தெரிந்து கொள்ளுங்கள். எனது அறிக்கையின் உண்மைத்தன்மையை நீங்களே சோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.நான் தவறாக தகவல்கள் கொடுத்திருக்கிறேன் என நிருபணமானால் , நான் பொது மன்னிப்பு கேட்க தயாராக உள்ளேன்.
  ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று நீங்கள் அறிவிப்பதற்கு முன்பாகவே உங்களுக்கு நெருக்கமான தொழிலதிபர்களுக்கு இது பற்றி தெரியும் என்று மக்கள் மனதில் எழுந்துள்ள சந்தேகத்தை போக்க, இந்திய அரசின் அதிகாரபூர்வமான இணையதளத்தில் நான் மேலே குறிப்பிட்டுள்ள ரூ.1 கோடி விஷயத்தை வெளிப்படுத்துங்கள்.
  இந்தியாவில் முதல் 300 இடங்களில் உள்ள எந்த ஒரு தொழிலதிபரும் இந்த ரூ.1 கோடி விஷயத்தை வெளிப்படுத்தவில்லை என்றால் , நான் சொன்னது கண்டிப்பாக உண்மை என நிருபிக்கப்பட்டுவிடும்.
  மெர்சிடிஸ், பிஎம்டபிள்யூ, ஆடி, வோல்வே போன்ற கார்களை வங்கிகளின் வாசலிலோ அல்லது அந்த கார்களின் முதலாளிகளை வங்கிகளின் வரிசையில் நிற்பதை நான் இதுவரை பார்க்கவில்லை. பசியாலும் தாகத்தாலும் வாடிபோய் சாதாரண மக்கள் தான் ரூ.4000 மற்றும் தங்களது குறைந்த முதலீட்டுக்கான தொகையை  எடுக்க வரிசையில் நிற்கிறார்கள். இப்படிப்பட்ட சாதாரண மக்களிடம் தான் கறுப்பு பணம் உள்ளது என்றும் மேல் குறிப்பிட்ட கார்களின் முதலாளிகளிடம் இல்லை என்பது தான் உங்களின் கருத்து.
  இந்தியாவில் முதல் 300 இடங்களை பிடிக்கும் தொழில் நிறுவனங்களை தவிர அரசு ஒப்பந்ததாரர்கள் , அரசியல்வாதிகள், சுரங்க ஒப்பந்ததாரர்கள் ஆகியோரின் வங்கிகளில் செய்துள்ள முதலீடு குறித்த விவரங்களை அறிய மக்கள் விரும்புகிறார்கள்.
  இந்த விவரங்கள் தெரியாத வரை ,50% கருப்பு பணத்தை முதலீடு செய்துள்ளவர்கள் உங்களின் ஆதரவில் இருக்கும் 10 – 12 நிறுவனங்கள் தான் என்று மக்களுக்கு தெரியாது. சுமார் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான நிலத்தை உங்களிடம் பெற்றுவிட்டு , 7000 மக்களின் வேலைவாய்ப்பை தன்னகப்படுத்திக் கொண்டுள்ள இந்த 10-12 நிறுவனங்கள் ,வங்கிகளில் எவ்வளவு பணம் முதலீடு செய்துள்ளார்கள் என்பதாவது, சிறிய தொகைக்காக கால் கடுக்க வரிசையில் நிற்கும் சாதாரண மக்கள் தெரிந்துகொள்ளட்டும்.
  இந்த தகவல் இணையதளத்தில் வெளியானால் யாரெல்லாம் 300 முதல் 400 கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளார்கள். அவர்களின் இந்த வருமானத்திற்கு தக்க சான்று இல்லையேல் அவர்கள் மீது வருமான வரித்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை மக்கள் தெரிந்துகொள்வார்கள். மேலும் நவ.7 மற்றும் நவ.8 ஆம் தேதி இரவு 8 மணிக்கு முன்னால் வரை தங்கம் மற்றும் வைரம் வாங்கியவர்களின் விவரங்களை விசாரணை செய்து பாருங்கள். இதனால் பெரிய பண முதலாளிகள் ஏன் தங்கம் மற்றும் வைரங்களை வாங்குகிறார்கள் என மக்கள் சிந்திப்பார்கள்.
  கருணையின் அடிப்படையில் மேல் குறிப்பிட்டுள்ள தகவல்களை இந்திய அரசின் அதிகார பூர்வமான இணையதளத்தில் வெளியிட வேண்டும். இந்த தகவல்கள் , ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு நாட்டிற்கு நல்லதா அல்லது உங்களுக்கும், உங்கள் கட்சியினர் மற்றும் உங்களை சார்ந்தவர்களுக்கும் மட்டுமே நல்லதா என்பதை தெரிந்து கொள்வார்கள்.
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Post a Comment

  Item Reviewed: கருப்பை வெள்ளையாக்கும் அமித்ஷா அலுலகம் வீடியோ ஆதாரத்துடன் அம்பலபடுத்துவேன் – வைரலாகும் கடிதம் Rating: 5 Reviewed By: The Murasu
  Scroll to Top