சம்பந்தனுக்கு நடவடிக்கை எடுக்காமையே கிழக்கு முதலமைச்சரின் நடவடிக்கைக்கு காரணம்: பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க - THE MURASU

May 29, 2016

சம்பந்தனுக்கு நடவடிக்கை எடுக்காமையே கிழக்கு முதலமைச்சரின் நடவடிக்கைக்கு காரணம்: பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க

வடக்கில் இராணுவ முகாமொன்றிற்குள் அதிரடியாகப் புகுந்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் செயலை கேலியாகக் கொண்ட பிரதமர் உட்பட கூட்டு அரசாங்கத்தின் நடவடிக்கைகளின் பிரதிபலனாகவே இன்று கிழக்கில் கடற்படை அதிகாரி ஒருவரை அவமானப்படுத்தும் விதமாக முதலமைச்சர் நடந்துகொண்டார் என பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க கூறியுள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்படி கருத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும் கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயற்பாடு தொடர்பில் தீர்மானம் ஒன்று எடுக்கப்படாவிடில் எதிர்காலத்தில் இதற்கு மேலான ஒரு நிலைக்கு இராணுவத்தினர் முகம்கொடுக்க நேரிடும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here